சீனா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் - அமெரிக்கா எச்சரிக்கை

சீனா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் - அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்கா vs சீனா

அமெரிக்க குடிமக்கள் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படுவதையோ அல்லது, துன்புறுத்துவதையோ அமெரிக்கா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது.

  • Share this:
    தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஹாங்காங்கில் ஜனநாயக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சீனா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அரசில், பொருளாதாரம், எல்லைத்தகராறு, தென்சீன கடல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தொடர்ச்சியாக கருத்துமேதல் நிலவி வருகின்றன. இந்நிலையில், சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங் விவகாரத்தில் சீனாவின் நடவடிக்கைகள் ஜனநாயகத்தை பறிக்கும் செயல் என மெமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வழக்குறைஞர் உட்பட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட ஜனநாயக ஆர்வலர்களை ஹாங்காங் காவல்துறையினர் கைது செய்தனர்.

    உலக நாடுகள் பலவும் இந்த கைது நடவடிக்கைக்கு கவலை தெரிவித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹாங்காங் மற்றும் சீன அரசை கேட்டுக் கொண்டன.

    இந்த விவகாரத்தில் சீன அரசு மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ, இந்த அடக்குமுறை சீன கம்யூனிஸ்டு கட்சி தனது சொந்த மக்கள் மற்றும் சட்டத்தை அவமதிப்பு செய்வதை நினைவூட்டுகிறது என்றும், ஹாங்காங் மக்கள் மீது இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீன அரசு மீது பொருளாதார தடைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அமெரிக்கா பரிசீலிக்கும் என்றும் கூறியுள்ளார்.

    மேலும், அமெரிக்க குடிமகன் ஒருவர் கைது செய்யப்பட்ட செய்தி கேட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், அமெரிக்க குடிமக்கள் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படுவதையோ அல்லது துன்புறுத்துவதையோ அமெரிக்கா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாகவும் கூறினார்.
    Published by:Suresh V
    First published: