கொரோனாவால் பேரிழப்பைச் சந்திக்கும் அமெரிக்கா: கட்டுப்படுத்த முடியாமல் திணறுவது ஏன்?

உலகின் வலிமை மிக்க நாடாக கருதப்படும் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.

கொரோனாவால் பேரிழப்பைச் சந்திக்கும் அமெரிக்கா: கட்டுப்படுத்த முடியாமல் திணறுவது ஏன்?
கோப்புப் படம்
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உலக நாடுகளின் இயக்கத்தை அடியோடு நிறுத்தியுள்ளது. 2019 டிசம்பரில் சீனாவின் ஊஹானில் ஆரம்பித்த கொரோனா பரவல் இன்று உலகின் பெரும்பாலான நாடுகளை பாதித்தாலும் அமெரிக்காவே அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது.

எல்லைகளை மூடுதல் , விமான போக்குவரத்து தடை, கடுமையான தனிமனித இடைவெளி, அதிகப்படியான எண்ணிக்கையில் பரிசோதனைகள், தொற்று பாதித்தவரை தனிமைபடுத்துதல், தொடர்பாளர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் என வரிசையாக இவற்றை பின் பற்றி தென் கொரியா, தைவான், வியட்நாம் போன்ற நாடுகள் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் வைத்திருக்கின்றன.

ஆனால் இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டியதன் விளைவு இன்று அதிகப்படியான பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் சந்திக்கின்றன. உலக அளவில் ஒட்டு மொத்த கொரோனா தொற்றில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 17 லட்சம் பேர் அமெரிக்கவில் உள்ளனர். அதே போல உயிரிழப்பிலும் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கிறது.


கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் அமெரிக்கா தவறவிட்டவைகள் ஏராளம். ஜனவரி 20 ம் தேதி தென் கொரியாவில் முதல் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. அடுத்த நாள் ஜனவரி 21 அன்று அமெரிக்காவில் முதல் தொற்று கண்டறியப்படுகிறது. அடுத்த நான்கு நாட்களில் தென் கொரியா நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைக்கான கருவிகளை அனுப்பிவைக்கிறது. ஆனால் அமெரிக்காவில் 12 நாட்கள் கழித்துதான் பரிசோதனை முறைக்கும் கருவிகளுக்குமான அனுமதி கிடைக்கிறது .

முதல் தொற்று கண்டறியப்பட்டு 6 வாரங்கள் கழித்து 3,000 கொரோனா பரிசோதனைகள் மட்டுமே நடக்கின்றன. அதே நேரத்தில் தென் கொரியாவில் 1,88,000 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. முதல் தொற்று ஏற்பட்டு 45 நாட்கள் கழித்தே கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன. ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் 6 நாட்களில் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.

மருத்துவ பரிசோதனைக் கருவிகள், பாதுகாப்பு உடைகள், மருந்துகள் பற்றாக்குறை ஏற்படுகின்றன. மாகாணங்கள் மருத்துவ கருவிகள் வாங்க நிதியின்றி தவித்தன. இது போன்ற காரணங்களால் சிகிச்சைகள் தாமதமாகின்றன. இதனாலேயே பிற நாடுகளுக்கு போக வேண்டிய மருத்துவ கருவிகள் அமெரிக்க பர்ஸ்ட் என்ற முழக்கத்துடன் இடைமறித்து வாங்கப்படுகினறன.கொரோனா சிகிச்சைக்கு எந்த மருந்தை பயன்படுத்துவது என முடிவெடுக்காமல் தாமதமாக்கியது சிக்கலை மேலும் தீவிரப்படுத்தியது. தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்படாமல் இருந்தது, சரியான திட்டமிடல் இல்லாமல் இருந்தது, சீனா மற்றும் இத்தாலியில் கிடைத்த அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளாமல் காலம் தாழ்த்தியது போன்ற காரணங்களால் இன்று அமெரிக்கா பெரும் உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது.
First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading