கொரோனா தடுப்பூசி மூன்றாவது டோஸ் போடத் தயாராகும் அமெரிக்கா

மாதிரிப் படம்

கொரோனாவுக்கு இரு தடுப்பூசி போதாது என்று மூன்றாவது தடுப்பூசி போடும் நாடுகளின் பட்டியலில் தற்போது அமெரிக்காவும் சேர்ந்துள்ளது.

  • Share this:
    உலகம் முழுவதும் பல கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்தாலும் பொதுவாக குறிப்பிட்ட கால இடைவெளியில் இரு டோஸ்கள் மட்டுமே ஒருவருக்கு செலுத்தப்படுகிறது. ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி என்றால் ஒரே ஒரு டோஸ் மட்டுமே போடப்படும். இதுவே போதுமானது என்றிருந்த நிலை மாறி, தற்போது பூஸ்டர் என அழைக்கப்படும் மூன்றாவது தடுப்பூசி போடுவது இன்னும் பாதுகாப்பானது என உலகம் முழுவதும் ஆய்வு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, இஸ்ரேல், செர்பியா, சிலி உள்ளிட்ட சில நாடுகள் மூன்றாவது தடுப்பூசி போடும் பணியை ஏற்கெனவே தொடங்கிவிட்டன. அந்த பட்டியலில் தற்போது அமெரிக்காவும் இணைந்துள்ளது. அந்நாட்டில் செப்டம்பர் 20ம் தேதி முதல் பொதுமக்களுக்கு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

    2வது டேஸ் தடுப்பூசி போட்ட 8 மாதங்களில் பூஸ்டர் டோஸ் போட வேண்டும். இந்த பூஸ்டர் தடுப்பூசி இலவசம். 80,000 தடுப்பூசி மையங்களில் எங்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். ஏற்கெனவே தடுப்பூசி போட்ட அடையாள அட்டையை காட்டினாலே போதும். வேறு அடையாள அட்டை தேவையில்லை.

    அமெரிக்காவில் தற்போது மாடர்னா, பைசர் தடுப்பூசிகளை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. அந்த தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு அந்த நிறுவனங்களின் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடப்படும். ஒரே ஒரு டோஸ் கொண்ட ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் போட ஆய்வு நடக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இரு டோஸ் தடுப்பூசிகள் மூலம் கிடைக்கும் எதிர்ப்பு சக்தி புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக தீவிரமாக செயலாற்றவில்லை என்பது ஆய்வில் உறுதியானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், உலகில் அனைவருக்கும் இரு டோஸ் தடுப்பூசி போட்ட பின்பே பூஸ்டர் டோஸ் பற்றி யோசிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளதை பல நாடுகள் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
    Published by:Karthick S
    First published: