கொரோனா எதிரொலி... அமெரிக்காவில் 42 ஆண்டுகளாக களைகட்டும் மார்கழி இசைத் திருவிழா ரத்து

கொரோனா எதிரொலி... அமெரிக்காவில் 42 ஆண்டுகளாக களைகட்டும் மார்கழி இசைத் திருவிழா ரத்து

கோப்புப்படம்.

அமெரிக்காவில் 42 ஆண்டுகளாக களைகட்டும் மார்கழி திருவிழா இந்த ஆண்டு கொரோனா எதிரொலியால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் பற்றும் பெற்றது மார்கழி திருவிழா. 42 ஆண்டுகளாக அமெரிக்காவின் ஒஹையொ மாகாணத்தில் உள்ள க்ளீவ்லேண்டில் நடத்தப்படும் மார்கழி தியாகராஜ உற்சவம் இதற்கு சான்று. கடந்த ஆண்டு அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் 5,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் வந்திருந்ததாக கூறும் விழா ஏற்பாட்டாளர் க்ளீவ்லேண்ட் சுந்தரம், கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் தாக்கத்தை விளக்குகிறார்.

  வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மட்டுமல்லாது பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும், முறைப்படி பாரம்பரிய கலைகளைக் கற்க தங்கள் குழந்தைகளை சென்னைக்கு அனுப்புவது வழக்கம். அவர்களின் கற்றலுக்கு உதவும் க்ளீவ்லேண்ட் சுந்தர், அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் க்ளீவ்லேண்ட் தியாகராஜர் மார்கழி இசைவிழா நடத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறுகிறார்.

  Also read: பொங்கல் பரிசாக அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  மறுபுறம், மார்கழி மாதம் தவறாமல் சென்னைக்கு தாயகம் திரும்பும் கலைஞர்களும் ஏராளம். அவர்களில் ஒருவர், வீணை இசை கலைஞர் நிர்மலா ராஜசேகர். இவரும் கொரோனாவுக்குப் பிறகான விடியலுக்காக காத்திருக்கிறார்கள். ஓர் ஆண்டில் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம்வரை மட்டுமே வருமானம் காணும் ஆயிரக்கணக்கான கலைஞர்களின் நிலையும் கவலைக்குறியதே. இந்நிலையில், அவர்களுக்கு சர்வதேச அமைப்புகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன.

  இந்த ஆண்டு கலைஞர்கர்கள் சந்தித்திருக்கும் வருவாய் இழப்பை ஈடுகட்ட, அடுத்த ஆண்டு நடக்கும் விழாக்களில் அதிக எண்ணிக்கையிலான நிகழ்சிகளை நடத்தவும் சர்வதேச இசை அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: