அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது: அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட்

அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது: அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட்
டிரம்ப் மோடி
  • Share this:
அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் அதிபர் டிரம்ப், தன் மனைவி மெலானியாவுடன் கலந்து கொண்டார்.

படை வீரர்கள் மற்றும் சேவை அமைப்புகளை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த விழாவில் விமானங்கள் வானில் அணிவகுத்து மரியாதை செலுத்தின.

இரவில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கண்ணைக் கவரும் வகையிலான பட்டாசுகளை வெடித்து சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.


இந்நிலையில் அமெரிக்காவின் 244வது சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்க மக்களுக்கும், அதிபர் டிரம்புக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக ட்விட்டரில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.மேலும் படிக்க...

கொரோனாவை வெல்ல உதவும் பிளாஸ்மா சிகிச்சை எப்படி செயல்படுகிறது?

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக சுதந்திரத்தையும், மனித வளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அதையே இந்நாள் கொண்டாடப்படுவதாகவும் பதிவிட்ட மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading