இரவோடு இரவாக கூடாரத்தை காலி செய்த அமெரிக்கா: புலம்பும் ஆப்கானிஸ்தான் ராணுவத் தளபதி!

மாதிரிப் படம்

அமெரிக்காவின் முக்கிய விமான தளமாக பக்ரம் கருதப்பட்டது. பக்ரமில் சிறைச்சாலை ஒன்றும் உள்ளது.  தற்போது 5000 தலிபான்கள் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.  தற்போது அமெரிக்க படைகள் வெளியேறியதால் பக்ரம் பகுதியை நோக்கி  தலிபான்கள் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. 

  • Share this:
பக்ரம் விமான தளத்தில்  இருந்து இரவோடு இரவாக அமெரிக்க படை வெளியேறியதாக ஆப்கானிஸ்தானில் புதிய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில்  தீவிரவாதிகள் மற்றும் அரச படைகளுக்கு இடையே  சுமார் 20 ஆண்டுகளாக   உள் யுத்தம் நடைபெற்று வருகிறது.  அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளும் இந்த உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா விரும்பியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா- தலிபான்கள் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  இதன்படி,  தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பக்ரம் விமான தளத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க படைகள் வெளியேறியது.

அமெரிக்காவின் முக்கிய விமான தளமாக பக்ரம் கருதப்பட்டது. பக்ரமில் சிறைச்சாலை ஒன்றும் உள்ளது.  தற்போது 5000 தலிபான்கள் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.  தற்போது அமெரிக்க படைகள் வெளியேறியதால் பக்ரம் பகுதியை நோக்கி  தலிபான்கள் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய தலிபான் தீவிரவாதிகள்!


இந்நிலையில், அமெரிக்க படைகள் தங்களிடம்  எந்த தகவலும் தெரிவிக்காமல் இரவோடு இரவாக பக்ரம் விமான தளத்தை விட்டு வெளியேறியதாக ஆப்கானிஸ்தானின் ராணுவ தளபதி அசாதுல்லா கோஹிஸ்தானி பிபிசி ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.  பக்ரமை தலிபான்கள் தாக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள அவர், அமெரிக்க படைகளையும், ஆப்கான் படைகளையும் ஒப்பிட்டால் பெரிய வித்தியாசம் இருக்கும் என்றும்  மக்களை காப்பாற்ற தங்களால் முடிந்தவற்றை செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: டெல்லிக்கு பறக்கும் முக்கிய தலைகள்!


அமெரிக்க படைகள் வெளியேறிய சில நிமிடங்களிலேயே அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டதாக அசோசியேட் பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.  ஏராளமான வாகனங்கள், சிறு ஆயுதங்கள் போன்றவற்றை அமெரிக்க படைகள் விட்டு சென்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Murugesh M
First published: