அமெரிக்காவில் 3 அடி உயரத்துக்கு பனிப்பொழிவு: சூறாவளிக் காற்று -75,000 விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் 3 அடி உயரத்துக்கு பனிப்பொழிவு: சூறாவளிக் காற்று -75,000 விமானங்கள் ரத்து

மாதிரிப் படம்

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் வீசியப் பனிப்புயலால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  • Share this:
அமெரிக்காவின் மேற்கு பகுதிகளில் உள்ள கொலராடோ, வயோமிங், உட்டா உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. வரலாறு காணாத பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருப்பதோடு, சாலைகளை முழுவதும் பனிக்கட்டிகளால் மூழ்கியுள்ளன.

இதனால் பொதுமக்கள் எங்கும் நடமாட முடியாத சூழல் நிலவுவதோடு, வீடுகள், வெளியே நிற்கும் கார்கள், மரங்கள் என அனைத்தையும் பனிப் போர்வை சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கொலரடோ மாகாணத்தில் வீசிய பனிப்புயலால், மாலை நேரத்தில் மட்டும் 3 அடி அளவிற்கு பனிப் பெய்துள்ளதாக அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வயோமிங் மாநிலத் தலைநகரான செயேனியில் மதிய வேளை வரை 65 செண்டிமீட்டர் அளவிற்கு பனி படர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சாலைகளில் குவிந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறும், அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். பனியோடு, சூறாவளிக் காற்றும் வீசுவதால், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


உடனடி செய்தி இணைந்திருங்கள்...
Published by:Karthick S
First published: