Home /News /international /

US Election 2020: அமெரிக்க தேர்தலின் சுவாரஸ்ய நிகழ்வுகள்.. (வீடியோ)

US Election 2020: அமெரிக்க தேர்தலின் சுவாரஸ்ய நிகழ்வுகள்.. (வீடியோ)

டிரம்ப் | கமலா ஹாரிஸ்

டிரம்ப் | கமலா ஹாரிஸ்

அதிபர் வேட்பாளர் பைடன் தனது பேத்தியை, மகன் என்று அறிமுகபடுத்தியது கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும். இந்த தேர்தலில் சில சுவரஸ்யமான சம்பவங்கள் நடந்தது. அவை குறித்து இந்த செய்தியில் தெரிந்துக்கொள்ளலாம்.

    கமலாவின் வெற்றிக்காக காத்திருக்கும் மக்கள்:

    அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரீஸின் பூர்வீக ஊரான, திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரத்தில், கிராம மக்கள் தேர்தல் முடிவுகளை ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி கோயில்களில் வழிபாடும் நடத்துகின்றனர்.

    அமெரிக்காவில் ஒரு கோடி பேருக்கு வந்த மர்ம அழைப்பு

    இதனிடையே தேர்தல் தினத்தன்று அமெரிக்காவில் பலருக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கு இந்த மர்ம அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது. இந்த தானியங்கி அழைப்பில் ஒலித்த குரல்” வீட்டிலேயே இருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள்” என்று நம் ஊர் கொரோனா வைரஸ் ரிங்டோன் போல கூறிய பின் அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நாளில் வன்முறைகள் நிகழலாம் என்ற அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் பலருக்கு வந்த இந்த மர்ம தொலைபேசி அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த அழைப்பில் கிருமிப்பரவல் பற்றியோ, அதிபர் தேர்தல் பற்றியோ குறிப்பாக எதுவும் சொல்லப்படவில்லை என்றபோதும் தேர்தல் நாளில் வந்ததால், இது குறித்து அமெரிக்க மத்திய புலனய்வுத்துறைவிசாரணை நடத்தி வருகிறது.

    மிசௌரி மாகாணத்தில் அமைக்கபட்ட ட்ரைவ் த்ரூ வாக்குச்சாவடி

    அமெரிக்க அதிபர் தேர்தலில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ட்ரைவ் த்ரூ வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. மிசௌரியில் உள்ள செயின்ட் லூயிஸ் பகுதியில் சாலையோரமாக அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு காரில் வந்த கொரோனா நோயாளிகள் வாக்களித்தனர். பாதுகாப்பு கவச உடையுடன் வந்திருந்த பணியாளர்கள் காரில் வருவோருக்கு வாக்குச்சீட்டுகளை வழங்கி வாக்களிக்க உதவினர்.



    தன்னை அழவைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த ட்ரம்ப்:

    இதனிடையே அதிபர் தேர்தலில் பிரசாரத்தை நிறைவு செய்தபோது, தன்னை அழ வைக்க வேண்டாம் என டிரம்ப் ஆதரவாளர்களிடம் கேட்டுக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மிச்சிகனில் உள்ள கிராண்ட் ரேபிட்ஸ் (Grand Rapids) பகுதியில் திங்களன்று இரவு தனது பிரசாரத்தை டிரம்ப் நிறைவு செய்தார். அப்போது நாங்கள் உங்களை நேசிக்கிறோம் என கூட்டத்தினர் தொடர்ந்து குரல் எழுப்பினர். அதனைக் கண்டு நெகிழ்ந்த டிரம்ப், தன்னை அழவைக்க வேண்டம் என ஆதரவாளர்களிடம் கேட்டுக் கொண்டார். தான் அழுதால் அதிபர் உடைந்து அழுதார் என பெரிய கதை கட்டி விடுவார்கள் என்றும் அது நல்லதல்ல என்றும் டிரம்ப் கூறினார்.



    தேர்தல் தினத்தில் தடுமாறிய பைடன்: பேத்தியை மகன் என்று அறிமுகம் செய்ததால் அதிர்ச்சி

    தேர்தல் நாளில், அதிபர் வேட்பாளர் பைடன் தனது பேத்தியை, மகன் என்று அறிமுகபடுத்தியது கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. பிலடெல்பியாவில் நேற்று ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பைடன், இவர் தான் எனது மகன் போ பைடன் என்று ஒரு பெண்ணை கூட்டத்தினரிடையே அறிமுகப்படுத்தினார். போ பைடன் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் பைடன் இவ்வாறு பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே சுதாரித்துக் கொண்ட பைடன், இது நடலி என்னுடைய பேத்தி என்று கூறினார். ஆனால் அப்போதும் அவர் இன்னொரு பேத்தியான ஃபினிகன் பிடனையே நடலி என அறிமுகப்படுத்தினார். ஒருவழியாக மீண்டும் தவறை சரிசெய்தார்.



    ஏற்கனவே பைடனை கவனக்குறைவானவர், நியாபக மறதி உடையவர் என எதிர்த்தரப்பு கலாய்த்து வரும் நிலையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பைடன் ஆதரவாளட்களிடையே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

     













    ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Donald Trump, Kamala Harris, US Election 2020

    அடுத்த செய்தி