அமெரிக்காவில் தாண்டவமாடும் கொரோனா: நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் பாதிக்கும் அபாயம்..

அமெரிக்காவில் மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காவிட்டால், நாளென்றுக்கு ஒரு லட்சம் பேர் வரை, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என அந்நாட்டின் தொற்று நோய் நிபுணரான அந்தோனி ஃபவுசி எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் தாண்டவமாடும் கொரோனா: நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் பாதிக்கும் அபாயம்..
கோப்புப் படம்
  • Share this:
உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது அங்கு இதுவரை 27 லட்சத்து 28,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாளொன்றுக்கு 40 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்கா தவறான பாதையில் பயணிப்பதாகவும் இதே நிலை நீடித்தால் அன்றாம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டும் என அந்நாட்டின் தொற்று நோய் நிபுணர் அந்தோனி ஃபவுசி எச்சரித்துள்ளார்.

உள் அரங்க கூட்டங்கள், மதுபான பார்களில் ஒன்று கூடுதல் ஆகியவை கொரோனா தொற்று பரவ முக்கிய காரணமாக மாறியுள்ளதாக ஃபவுசி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணாங்களில் தொற்று அதிகம் பரவுவதாக எச்சரித்துள்ள ஃபவுசி, நியூயார்க், கலிஃபோர்னியா, டெக்சாஸ் மற்றும் நியூஜெர்சி மாகாணங்களின் செயல்பாடுகள் தனக்கு திருப்தி அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


சில மாகாணங்களின் நடவடிக்கை திருப்தி அளிக்கிறது ஆனால் குறிப்பிட்ட 4 மாகாணங்களில் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. 4 மாகாணங்கள் 50 சதவிகிததிற்கும் மேலான பாதிப்புகளுக்கு காரணமாக உள்ளன. அன்றாடம் வெளியாகும் பாதிப்பு எண்ணிக்கைகளே தொற்று பரவலின் தீவிரதத்தை உணர்த்துகின்றன. அமெரிக்கா தற்போது தவறான பாதையில் செல்கிறது  இது எனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றுள்ளார்.

அமெரிக்கா முழுவதும் இத்தனை பேர் பாதிக்கப்பட்டும், இதுவரை அங்கு முகக்கசவம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை. அதிபர் டிரம்ப்பும் முகக்கவசம் அணியாமல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இது அங்கு பெரும் அரசியலாக மாறி வருகிறது. முகக்கவசம் அணிந்தால் டிரம்பின் எதிர்பாளர் என்றும், அணியாவிட்டால் ஆதரவாளர் என்ற முத்திரையும் குத்தப்படுகிறது.

இதனிடையே கொரோனா பாதிப்பு காரணமாக பாதுகாப்பான நாடுகள் பயணப்பட்டியலில் இருந்து அமெரிக்காவை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளிப்புற எல்லைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய ஆணையம், அதன் எல்லைகளுக்கு அப்பால் அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து சுற்றுலா மற்றும் வணிக பயணங்கள் மேற்கொள்ள ஒப்புதல் அளித்தது.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading