ஊடகத்தின் மீதான ட்ரம்பின் தாக்குதல் அமெரிக்காவுக்குதான் ஆபத்து: அமேசான் நிறுவனர்

ஜெஃப் பெஜோஸ் (கோப்பு படம்)

 • News18
 • Last Updated :
 • Share this:
  அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் ஊடகத்தின் மீது நடத்தும் தாக்குதல், அமெரிக்காவுக்கு ஆபத்து விளைவிக்கும் என அமேசான் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் செய்திதாளின் நிறுவனர் ஜெஃப் பெஜோஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

  அமெரிக்காவின் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ஜனநாயகத்தின் முக்கியத்துவமமான சமூக நெறிகள் மற்றும் பாதுகாப்பு மீது ட்ரம்ப் தாக்குதல் நடத்துகிறார் என்று குற்றஞ்சாட்டினார். மேலும் ஊடகங்களை தீய சக்திகளாகவும், மக்களுக்கு எதிரானவையாகவும், குறுகிய காலம் கொண்டவை என அதிபர் டிரம்ப் வர்ணித்து வருவதற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

  நம் சமூகத்தை வெறும் சட்டங்களால் மட்டுமே பாதுகாக்கப்படவில்லை என்றும், சமூக அறங்களும் அவற்றை பாதுகாப்பதாகவும் ஜெஃப் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதனால் தான் பத்திரிக்கையில் வரும் வார்த்தைகளை நாம் நம்புகிறோம் என்று கூறிய அவர், ட்ரம்ப் மற்றும் பிற அரசியல் ஆளுமைகள் ஊடக ஆய்வுகளை எதிர்கொள்ளவதுதான் ஆரோக்கியமானது எனவும் அவர் தெரிவித்தார்.  கூறியுள்ளார்.



  தனக்கு அமேசானை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிய அவர், போஸ்டை (வாஷிங்டன் போஸ்ட்) பாதுகாக்க வேண்டியது தான் என் கடமை என்று தெரிவித்தார்.

  செய்தி ஊடகங்கள் நாட்டில் பலமாக இருப்பதாக கூறிய அவர், அதன் எதிர்காலம் குறித்து கவலையில்லை என்று தெரிவித்தார். ஆனால் மாறாக டிரம்பை பற்றி தான் கவலையாக இருப்பதாகவும் அவர் கூறினார். அமேசான் நிறுவனத்தின் மீதான வரியை தொடர்ந்து உயர்த்தி வரும் டிரம்பிற்கும் எதிராக பொதுவெளியில் ஜெஃப் எதிர்த்து பேசியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Saroja
  First published: