கொரோனா பீதி காரணமாக வழக்கமாக ஆன்லைன் செய்பவர்களைத் தாண்டியும் பலரும் ஆன்லைன் ஷாப்பிங் முறைக்கு மாறியுள்ளதால், அமெரிக்காவில் அமேசான் ஒரு லட்சம் பணியாளர்களை பணியமர்த்துகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாகப் பொதுவான இடங்களில் மொத்தமாகக் கூட வேண்டாம், முகமூடிகள் பயன்படுத்தவும், சானிட்டைசர் மற்றும் சோப்புகளைப் பயன்படுத்தி கை கழுவவும் எனப் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி அனைத்து நாட்டு அரசுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் வீட்டுக்குத் தேவைப்படும் பொருள்களை வாங்குவதற்கு ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை பலரும் பயன்படுத்திவருகிறார்கள்.
அமெரிக்காவில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதால், இந்நிலையைச் சமாளிக்க 1,00,000 ஊழியர்களைப் புதிதாக வேலைக்கு பணியமர்த்த பிரபல ஆன்லைன் விற்பனைத் தளமான அமேசான் முடிவெடுத்துள்ளது. டெலிவரிக்காகவே பெரும்பாலான ஊழியர்களை வேலைக்கு எடுப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மணிக்கு 15 டாலர்கள் சம்பளமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், மணிக்கு 17 டாலர்கள் சம்பளமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது அமேசான்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.