• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சுமார் 8.4 மில்லியன் கால்பந்து மைதானங்களுக்கு நிகரான காடுகள் அழிந்தன..!

சுமார் 8.4 மில்லியன் கால்பந்து மைதானங்களுக்கு நிகரான காடுகள் அழிந்தன..!

அமேசான் காடுகள்

அமேசான் காடுகள்

சர்வதேச அளவில் உலக வெப்பமயமாதலுக்கு பெரும் தீர்வாக உள்ள அமேசான் காடுகளுக்கு சமீபகால நிகழ்வுகள் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நமது கிரகத்தின் நுரையீரலாகக் கருதப்படும் அமேசான் மழைக்காடுகள் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரும் அழிவைச் சந்தித்துள்ளன.

    கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 24,000 சதுர மைல்கள் பரப்பளவிலான காடுகள் அழிவைச் சந்தித்துள்ளன. அதாவது சுமார் 8.4 மில்லியன் கால்பந்து மைதானங்கள் அளவிலான காடுகள் அழிந்துள்ளன. இந்த புள்ளிவிவர ஆய்வை பிரிட்டனைச் சேர்ந்த ராயல் புள்ளியியல் சமூகம் மேற்கொண்டுள்ளது.

    பெரும் தொழில் ரீதியான நடவடிக்கைகளுக்காக அமேசான் காடுகள் கடந்த 2009-ம் ஆண்டு முதல் மாபெரும் ஆக்கிரமிப்பைச் சந்தித்து வருகிறது. மிகவும் மோசமான சுற்றுச்சூழல் சீர்கேட்டை இந்தப் புள்ளியியல் விவரம் காட்டுகிறது. சமீபத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் அமேசான் காடுகளில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீ பல வாரங்களாக நீடித்து பெரும் அழிவை ஏற்படுத்தின.

    சூழலியலுக்கு மற்றுமல்லாமல் மிருகங்களும் பல அரிய உயிரினங்களும் அழிவைச் சந்தித்தன. இந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 74 ஆயிரம் காட்டுத்தீ நிகழ்வுகள் அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ளன. 2018-ம் ஆண்டைவிட 2019-ல் 84 சதவிகிதம் இந்நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.

    சர்வதேச அளவில் உலக வெப்பமயமாதலுக்கு பெரும் தீர்வாக உள்ள அமேசான் காடுகளுக்கு சமீபகால நிகழ்வுகள் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. அமேசான் காடுகள் பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈக்வேடார், கயானா, பெரு, சூரினேம் மற்றும் வெனிசுலா ஆகியப் பகுதிகளில் பரந்து விரிந்துள்ளது.

    மேலும் பார்க்க: குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக அமெரிக்கவாழ் இந்தியர்கள் வாஷிங்டனில் போராட்டம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: