மனைவியை விவாகரத்து செய்தார் உலகப் பெரும் பணக்காரர்!

ஜெஃப் பெசோஸ்

திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில், அவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளன. மேலும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

இ-காமர்ஸ் சந்தையில் உலகம் முழுவதும் கொடிநாட்டும் அமேசான் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் ஜெஃப் பெசோஸ். பல ஆண்டுகளாக உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்து ஆச்சரியப்பட வைத்தார்.

தற்போது 137 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை கொண்டுள்ள அவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். “நீண்ட கால காதல் வாழ்க்கைக்குப் பிறகு, சோதனை முறையில் பிரிந்து வாழ்ந்த பிறகு, நாங்கள் விவாகரத்து செய்துகொண்டு, நண்பர்களாக இருக்க முடிவு செய்துள்ளோம்” என்று இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், “தனித்தனி வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும், நாங்கள் குடும்பமாக இருப்போம். எதிர்காலத்தில் பெற்றோர்களாக, நண்பர்களாக, பணித் திட்டங்களில் கூட்டாளிகளாக சேர்ந்து செயல்படுவோம்” என்றும் தெரிவித்துள்ளனர்.

திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில், அவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளன. மேலும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள்.

Also See..

Published by:Sankar
First published: