Home /News /international /

விதிகளை மீறி போட்டி நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக புகார்... அமேசானுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அபராதம் விதிப்பு

விதிகளை மீறி போட்டி நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக புகார்... அமேசானுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அபராதம் விதிப்பு

Amazon

Amazon

ஒரு தொழில் நுட்ப நிறுவனம் இவ்வளவு அபராதத்தை எதிர்கொள்ளும் என்பது இதுவே முதன்முறையாகும். முன்பு சில முன்னணி நிறுவனங்கள் ஐரோப்பிய நாடுகளில் புகார்களை எதிர்கொண்டு அதற்காக அபராதத்தையும் செலுத்தியிருக்கின்றன.

    செல்வாக்கை தவறாக பயன்படுத்தி, விதிகளை மீறி, போட்டியாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின்பேரில் அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இத்தாலியில் நிறுவனங்களை முறைப்படுத்தும் அமைப்பு, அமேசான் நிறுவனம் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களுக்கு (Third Party Sellers) தனது இடமாற்ற சேவைகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்ததாகவும், இதனால் தனது போட்டியாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

    அந்த வகையில், இத்தாலியில் அமேசான் நிறுவனத்திற்கு 1.30 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    அமேசான் ஆன்லைனில் பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்கும்போது, குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பொருட்கள் மட்டும், அதிகமுறை காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள், அமேசானின் போட்டி நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவை.

    அவற்றை ஊக்கப்படுத்துவதன் மூலம், தனது போட்டியாளர்களுக்கு இழப்பை அமேசான் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் குற்றச்சாட்டு. இவ்வாறு வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் பொருளை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு, குடோன், டெலிவரி உள்ளிட்ட வசதிகளை அமேசான் செய்து கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

    Also Read : போதைப்பொருள் வழக்கு: அமேசான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்... வர்த்தகர்கள் கேள்வி!

    ஒரு தொழில் நுட்ப நிறுவனம் இவ்வளவு அபராதத்தை எதிர்கொள்ளும் என்பது இதுவே முதன்முறையாகும். முன்பு சில முன்னணி நிறுவனங்கள் ஐரோப்பிய நாடுகளில் புகார்களை எதிர்கொண்டு அதற்காக அபராதத்தையும் செலுத்தியிருக்கின்றன.

    இத்தாலி சட்டப்படி, அங்கு நிறுவனங்களை கண்காணிக்கும் அமைப்புக்கு, ஒரு நிறுவனம் மோசடி செய்கிறது என்றால் அதன் ஆண்டு வருமானத்தில் 10 சதவீதத்தை அபராதமாக விதிக்கும் அளவுக்கு அதிகாரம் உள்ளது. இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள அமேசான் நிறுவனம், இதனை எதிர்த்து சட்டப்படி மேல்முறையீடு செய்யப் போவதாக கூறியுள்ளது.

    மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களின் தகவல்களை பயன்படுத்தி, போட்டியை ஏற்படுத்தும் பொருட்களை சந்தைப்படுத்தியதாக அமேசான் மீது ஏற்கனவே புகார் உள்ளது.

    Also Read : அமேசான் வர்த்தக நிறுவன உதவியால் கஞ்சா விற்பனை நடந்த வழக்கில் 5 பேர் கைது
    Published by:Musthak
    First published:

    Tags: Amazon

    அடுத்த செய்தி