ஹோம் /நியூஸ் /உலகம் /

அமேசான் நிறுவன உரிமையாளர் போனை ஹேக் செய்தாரா சவுதி அரேபிய இளவரசர்?

அமேசான் நிறுவன உரிமையாளர் போனை ஹேக் செய்தாரா சவுதி அரேபிய இளவரசர்?

முகமது பின் சல்மான் ஜெஃப் பெசோஸ்

முகமது பின் சல்மான் ஜெஃப் பெசோஸ்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  அமேசான் நிறுவன உரிமையாளர் ஜெஃப் பெசோஸின் மொபைல் போனை சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் உளவு பார்த்ததாக கார்டியன் நாளிதழில் செய்திகள் வெளியாகியுள்ளது. இது உலக அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  உலகின் மிகப் பெரிய பணக்காரராக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் திகழ்ந்துவருகிறார். அவர் குறித்து கார்டியன் வெளியிட்ட செய்தியில், ‘ஜெஃப் பெசோஸுக்கும் முகமது பின் சல்மானுக்கும் இடையிலான நட்பு அடிப்படையிலான வாட்ஸ்அப் மெசேஜ் பகிர்வின் போது, வைரஸ் உள்ள வீடியோ ஒன்றை பெசோஸுக்கு முகமது பின் சல்மான் அனுப்பியுள்ளார். பின்னர், ஒரு மணி நேரத்தில் பெசோஸின் போனிலிருந்து ஏராளமான தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  மேலும் அந்தச் செய்தியில், ’பெசோஸின் பாதுகாப்பு பொறுப்பாளர் கூறும்போது, சவுதி அரேபியா அரசு பெசோஸின் மொபைல்போனை பயன்படுத்தி, அதிலிருந்து தகவல்களை எடுத்துள்ளது. சவுதி அரேபியா பெசோஸின் போனில் ஊடுருவியுள்ளது என்று எங்களுடைய விசாரணை அதிகாரிகள் மற்றும் பல வல்லுநர்கள் உச்சகட்ட நம்பிக்கையுடன் உறுதிபடுத்தியுள்ளனர்’ என்று தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  இதுகுறித்து விளக்கமளித்துள்ள சவுதி அரேபிய அரசு, ‘ஜெஃப் பெசோஸின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதன் பின்னணியில் சவுதி அரேபியா உள்ளதாக வெளியான செய்திகள் அபத்தமானது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை செய்யவேண்டும் என்று அழைப்புவிடுக்கிறோம். அப்போதுதான் நாம் இதுதொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வர முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

  Also see:

   

  Published by:Karthick S
  First published: