முகப்பு /செய்தி /உலகம் / சிறுத்தை புள்ளிகள் உள்ளாடை.. ரூ.75 லட்சத்துக்கு ஆன்லைனில் ஏலம் விட்ட பிரபல பாடகி!

சிறுத்தை புள்ளிகள் உள்ளாடை.. ரூ.75 லட்சத்துக்கு ஆன்லைனில் ஏலம் விட்ட பிரபல பாடகி!

ஏலம் விட்ட பாடகி

ஏலம் விட்ட பாடகி

இபே எனும் ஆன்லைன் விற்பனை தளத்தில் ரூ. 75 லட்சம் என பட்டியலிட்டு பதிவு செய்தார் ராப் பாடகி அலிசா

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அமெரிக்காவை சேர்ந்த ராப் பாடகி அலிசா மைக்கெல் ஸ்டீபன் என்பவர் தான் பயன்படுத்திய உள்ளாடை ஒன்றை சமீபத்தில் ஆன்லைனில் ஏலம் விட்டார். சமூகவலைதளத்தில் பிரபலமான ராப் பாடகி அலிசா, ஒரே மாதிரியான உள்ளாடை அணிந்திருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி பேசுபொருளாகும். அந்த வகையில் அவர் அணிந்திருந்த சிறுத்தை புள்ளி உள்ளாடை ஒன்று பேசு பொருளானது. இது குறித்து அவர் நகைச்சுவையாக பதிலடியும் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து தான் பயன்படுத்திய உள்ளாடையை ஏலம்விடப்போவதாக தெரிவித்தார். அந்த பதிவில் அந்த உள்ளாடையில் பெயர் லாட்டோ எனவும் சிறுத்தை புள்ளிகள் தோற்றம் கொண்ட இந்த உள்ளாடைகள் தான் அதிகம் பயன்படுத்தியதாக ட்விட்டரில் பேசு பொருளானதாகவும் தெரிவித்தார். மேலும் இதனை விற்று அந்த பணத்தை புது உள்ளாடைகள் வாங்க பயன்படுத்தவுள்ளதாக கூறினார்.

தன்னிடம் இதுபோல் நிறைய உள்ளாடைகள் இருப்பதாக தெரிவித்த அவர், புதிதாக 5 வைத்துள்ளதாகவும் அதில் இரண்டை இன்று பயன்படுத்திவிட்டு நாளை விற்பனை செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து இபே எனும் ஆன்லைன் விற்பனை தளத்தில் ரூ. 75 லட்சம் என பட்டியலிட்டு பதிவு செய்தார். ஆனால் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே இபே நிறுவனம் அந்த பதிவை நீக்கியது. தங்கள் கம்பெனி பாலிசியின் படி பழைய துணிகள் விற்பனை செய்யக்கூடாது எனவும் சுகாதாரம் மிகவும் முக்கியம் எனவும் விளக்கம் அளித்தனர். இது சமூகவலைதளத்தில் பேசு பொருளாகியுள்ளது.

First published:

Tags: Trending News, Viral News