துருக்கி நாட்டின் காஜியான்தெப் நகரை மையமாக வைத்து நேற்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது, துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அத்துடன் சுற்றியுள்ள நாடுகளான லெபனான், இஸ்ரேல் ஆகியவற்றிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கை 4,000ஐ தாண்டியுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் பெரும் சேதத்திற்கு ஆளானதால் பல குடும்பங்கள் வீடுகளை இழந்து தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த வரலாறு காணாத நிலநடுக்கத்தின் தாக்கத்தில் மீள்வதற்குள்ளாக நேற்றே மீண்டும் இரு முறை நிலநடுக்கங்கள் நிகழ்ந்ததால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
மீட்பு பணிக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பேரிடர் குழுக்களை அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளன. பேரிடர் பாதிப்பு ஒரு புறம் இருக்க, இதை பேரிடர் சூழலை சாதகமாக பயன்படுத்தி வடமேற்கு சிரியாவில் உள்ள சிறையில் இருந்து 20 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தப்பி சென்றுள்ளனர். ஈராக், சிரியா ஆகிய நாடுகளை மையமாகக் கொண்டு உருவான ஐஎஸ் இயக்கதைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ரோஜோ என்ற சிறையில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதையும் படிங்க: நிலநடுக்கம் என்றால் என்ன, ஏன் ஏற்படுகிறது.? சுனாமி வர என்ன காரணம்.. முழு விவரம்.!
நிலநடுக்கம் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளியை பயன்படுத்தி சுமார் 20 ஐஎஸ் பயங்கரவாதிகள் சிறையில் இருந்து தப்பியுள்ளதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். பேரிடர் பாதிப்புக்கு ஆளான சிரியாவுக்கு இது கூடுதல் தலைவலியாக மாறிய நிலையில், அவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Earthquake, ISIS, Syria