50 முன்னாள் எம்.பி.க்களுடன் சேர்ந்து கட்சி மாறிய ராஜபக்சே!

ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ராஜபக்சேவை பிரதமராக்கியதில் தொடங்கிய இலங்கை அரசியலின் குழப்பம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

50 முன்னாள் எம்.பி.க்களுடன் சேர்ந்து கட்சி மாறிய ராஜபக்சே!
ராஜபச்சே
  • News18
  • Last Updated: November 11, 2018, 9:08 PM IST
  • Share this:
இலங்கையில் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் மஹிந்த ராஜபக்சே, 50 முன்னாள் எம்.பி.க்களுடன் சேர்ந்து இன்று கட்சி மாறினார்.  

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து ரணில் நீக்கப்பட்டார். புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

மேலும் நாடாளுமன்றமும் முடக்கப்பட்டது. இதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்ததால், நாடாளுமன்றம் 14-ம் தேதி கூடும் என்று சிறிசேனா அறிவித்தார்.


பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்.பி.க்கள் ஆதரவு வேண்டும் என்ற சூழலில், ராஜபக்சேவுக்கான ஆதரவை திரட்ட சிறிசேனா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் நாடாளுமன்றத்தை கலைப்பதாக சிறிசேனா அறிவித்தார். ஜனவரி 5-ல் தேர்தல் நடைபெறும் எனவும், அதற்கான மனு தாக்கல் வரும் 19-ம் தேதி தொடங்கும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ராஜபக்சேவை பிரதமராக்கியதில் தொடங்கிய இலங்கை அரசியலின் குழப்பம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திடீர் திருப்பமாக, மஹிந்த ராஜபக்சே இன்று கட்சி மாறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய அவர், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளார். ராஜபக்சேவுடன் சேர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 50 முன்னாள் எம்.பி.களும் கட்சி மாறியுள்ளனர். இதனால் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளை விட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனது செல்வாக்கை இழந்துள்ளது.Also watch

First published: November 11, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்