Home /News /international /

சீனாவை மீண்டும் ஆட்டிப்படைக்கும் கொரோனா - 19 மாகாணங்களில் வேகமெடுப்பதால் கெடுபிடிகள்

சீனாவை மீண்டும் ஆட்டிப்படைக்கும் கொரோனா - 19 மாகாணங்களில் வேகமெடுப்பதால் கெடுபிடிகள்

சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா

சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா

சீனாவில் மீண்டும் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சீனாவில் மீண்டும் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது.

    அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது முந்தைய நாளை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இதன்படி இரண்டு ஆண்டுகளில் சீனா அதன் கடுமையான வைரஸ் பாதிப்புகளை எதிர்கொள்கிறது.

    சுமார் 19 மாகாணங்களில் ஓமைக்ரான், டெல்டா வகை கொடிய கொரோனா வைரஸ்கள் வேகமெடுத்து வருவதால் அங்கு கெடுபிடிகள் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து, நாடு தழுவிய கொரோனா பாதிப்புகளால் சீன அதிகாரிகள் ஷாங்காயில் பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளனர். ஜிலின் நகரத்தில் பகுதியளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு நூற்றுக்கணக்கான சுற்றுப்புறங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனா, விரைவான ஊரடங்குகள், பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தொற்று பரவல் தோன்றியபோது வெகுஜன சோதனைகள் மூலம் அமல்படுத்தப்பட்ட கடுமையான 'பூஜ்ஜிய-கோவிட்' கொள்கையை பராமரித்து வருகிறது. ஆனால் மிகவும் பரவக்கூடிய ஓமிக்ரான் மாறுபாடு மற்றும் அறிகுறியற்ற நிகழ்வுகளின் அதிகரிப்பு ஆகியவற்றால் இயக்கப்படும் சமீபத்திய வைரஸ் பரவல், அந்த அணுகுமுறைக்கு சவால் விடுத்துள்ளது.

    இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,15,466 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,636 ஆக உள்ளது.

    ஜிலினில் வசிப்பவர்கள் ஆறு சுற்றுகள் மருத்துவ கொரோனா சோதனைகளை முடித்துள்ளனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை நகரத்தில் ஓமிக்ரான் வைரஸ் 500 க்கும் மேற்பட்டோருக்கு தொற்றியுள்ளது.

    அண்டை நகரமான சாங்சுன் வெள்ளிக்கிழமை முழு லாக் டவுனை எதிர்கொண்டது- ஒன்பது மில்லியன் மக்கள் வசிக்கும் தொழில்துறை நகரமாகும் இது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: China, Corona, Wuhan

    அடுத்த செய்தி