விமானத்தில் ஏறிய சில நிமிடங்களில் மயங்கிவிழுந்த 185 பயணிகள்- கனடாவில் பரபரப்பு

விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமானத்தில் இருந்த மொத்த பயணிகளும் அசெளகரியமாக உணர்ந்துள்ளனர்.

விமானத்தில் ஏறிய சில நிமிடங்களில் மயங்கிவிழுந்த 185 பயணிகள்- கனடாவில் பரபரப்பு
கனடா விமானம்
  • News18
  • Last Updated: January 25, 2019, 11:59 AM IST
  • Share this:
கனடாவில் விமான நிலையம் ஒன்றில் 185 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் சில நிமிடங்களிலேயே பயணிகள் அனைவரும் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.

கனடாவில் உள்ள க்யூபெக் விமான நிலையத்தில் இருந்து ஏர் ட்ரான்சாட் விமானம் 782 நேற்று வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் ஃபுளோரிடாவுக்குப் புறப்பட்டது.

ஆனால், விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமானத்தில் இருந்த மொத்த பயணிகளும் அசெளகரியமாக உணர்ந்துள்ளனர்.


விமானப் பணி ஊழியர்கள் கவனிக்கும் முன்னரே பயணிகள் பலரும் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாகத் தரையிறக்கப்பட்டு விமானத்தில் இருந்த 185 பயணிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமானத்தினுள் காற்று மாசு அடைந்திருக்கலாம் என்ற சந்தேகம் முதலில் எழுந்துள்ளது. ஆனால், தரையிறக்கப்பட்ட ஜீன் லெசேஜ் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் விமானத்தின் காற்றின் தரத்தை சோதித்தபோது பிரச்னை எதுவும் ஏற்படவில்லை என்றே அறிக்கை அளித்துள்ளனர்.

ஐந்து பயணிகள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடுதல் விசாரனையை ஏர் ட்ரான்சாட் விமான நிறுவனம் செய்து வருகிறது.மேலும் பார்க்க: யார் ANTI INDIANS? ஜிப்ஸி பட இயக்குனர் ராஜூமுருகன் பதில்
First published: January 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்