நேபாளத்தின் பொக்ரா சர்வதேச விமான நிலையத்தில் Yeti ஏர்லைன்ஸ் விமானம் 68 பயணிகளுடன் தரையிறங்கியது. விமான ஊழியர்கள் உள்பட 72 பேர் விமானத்தில் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் இறங்கும்போது திடீரென விழுந்து நொறுங்கியது. இதில் விமானம் முழுவதும் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.
விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார். இந்த நிலையில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக நேபாள அரசு அறிவித்தது. விமானத்தில் பயணித்த 4 இந்தியர்களும் உயிரிழந்துவிட்டனர்.
#NepalPlaneCrash | Video of the aircraft right before the crash.
All passengers, including 4 Indians, were killed after a 72-seater passenger aircraft crashed on the runway at Pokhara International Airport in Nepal.#Pokhara #Nepal #PlaneCrash pic.twitter.com/vFrcS0ZGiT
— News18 (@CNNnews18) January 15, 2023
இதுவரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேபாள அரசின் அமைச்சரவைக் கூட்டம் அவசரமாக கூடியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.