Ramadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை

உலகம் முழுவதும் பிறை தென்பட்ட பகுதிகளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் இன்று ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.

Ramadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை
கோப்புப்படம்
  • Share this:
ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்கள், மாத இறுதியில் ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். பசியால் வாடுவோருக்கு உணவளிக்கும் ஈகைத் திருநாளாக, ரமலான் கொண்டாடப்படுகிறது.

கொரோனாவின் பிடியில் உலகம் உள்ள நிலையில் இந்த ஆண்டு வழக்கமான உற்சாகம் காணப்படவில்லை. தமிழகத்தில் சனிக்கிழமை பிறை தெரியாததால், திங்கட்கிழமை ரமலான் கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் அறிவித்தார்.

பிறை தெரிந்ததால் கேரளாவிலும், கன்னியாகுமரியிலும் மக்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தி ரமலானை கொண்டாடினர். இதே போல கோவையில் ஜாக் பிரிவு இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.


கர்நாடகா, காஷ்மீர் உள்பட நாட்டின் சில பகுதிகளில் வழக்கமான உற்சாகமின்றி ரமலான் கொண்டாடப்பட்டது.

ரமலானில் மனிதத் தலைகளால் நிறைந்து காணப்படும் இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா, இந்த ஆண்டு வெறிச்சோடி காணப்பட்டது. பாதுகாப்புப் பணியில் உள்ள அதிகாரிகள், மசூதி ஊழியர்கள் உள்ளிட்டோர் மட்டும் தனிமனித இடைவெளியுடன் தொழுகையில் ஈடுபட்டனர்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தனிமனித இடைவெளி, கையுறை, முகக்கவசத்துடன் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடி தொழுகையில் ஈடுபட்டனர். ஜெருசலேமில் தொழுகை முடிந்து ஆண்களும், பெண்களும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் சாலையில் தனிமனித இடைவெளியுடன் தொழுகை நடத்தப்பட்டது.

Also see...








First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading