ஹோம் /நியூஸ் /உலகம் /

சீனாவின் மிக வயதான மூதாட்டி 135-வது வயதில் காலமானார்

சீனாவின் மிக வயதான மூதாட்டி 135-வது வயதில் காலமானார்

சீனாவின் மிக வயதான நபரான அலிமிஹான் செயிதி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 135.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சீனாவின் தென்மேற்கு ஜின்ஜியாங்கின் கஷ்கர் நகரை சேர்ந்த அலிமிஹான், 1886, ஜூன் 25-ம்தேதி பிறந்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு அலிமிஹான் தான் சீனாவின் மிக வயதான நபர் என்று சீனா அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

மரணம் அடையும் வரையில் எளிய வாழ்க்கை வாழ்ந்த அலிமிஹான், நேரத்திற்கு சரியாக சாப்பிட்டு விடுவாராம். சூரிய ஒளியில் அடிக்கடி அமர்வது அவரது ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம் என்று ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : உலகின் முதல் எஸ்.எம்.எஸ் எதுவென்று தெரியுமா? சுவாரசிய தகவல்!

அவர் வசித் கொமுசெரிக் பகுதி, மிக வயதானவர்கள் வாழும் இடமாக கருதப்படுகிறது. இங்கு 90 வயதை தாண்டியும் பலர் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு சுகாதார சேவைகள் சிறப்பாக வழங்கப்படுவதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : மறைந்த தாயின் புகைப்படத்துடன் மணமேடைக்கு வந்த மணப்பெண்... வைரலாகும் வீடியோ

இப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ சேவை, ஆண்டுதோறும் உடல் பரிசோதனை, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இதையும் படிங்க : 1971-ல் பாகிஸ்தான் ராணுவத்தால் அழிக்கப்பட்ட காளி கோயில்- டாக்காவில் மீண்டும் திறப்பு

First published:

Tags: China