அண்டை கிரகங்களில் ஏலியன்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம்!- அமெரிக்கா ஆய்வு அறிக்கை

முந்தைய அறிவியல் ஆய்வுகள் பலவும் அதிகப்படியான கதிர்வீச்சு அண்டை கிரகங்களில் உயிர்களை வாழச்செய்யாது எனக் கூறப்பட்டது.

அண்டை கிரகங்களில் ஏலியன்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம்!- அமெரிக்கா ஆய்வு அறிக்கை
ஏலியன்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா?
  • News18
  • Last Updated: April 12, 2019, 11:31 AM IST
  • Share this:
கோள்கள் குறித்த அமெரிக்க ஆராய்ச்சியில் பூமியைத் தவிர பூமியைப் போல் அதிகக் கதிர்வீச்சுக் கொண்ட அண்டை கிரகங்களில் உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

முந்தைய அறிவியல் ஆய்வுகள் பலவும் அதிகப்படியான கதிர்வீச்சு அண்டை கிரகங்களில் உயிர்களை வாழச்செய்யாது எனக் கூறப்பட்டது. ஆனால், அமெரிக்காவில் கார்னெல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் புதிய தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. அதிகப்படியான புற ஊதாக்கதிர்கைன் வீச்சில் இருந்துதான் பூமியே உருவாகியுள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி ஒழுங்கற்ற ஒளிப்பிளம்பாகத் தான் இருந்துள்ளது. ஆனால், இவற்றையும் கடந்து பூமி உயிர்ப்பிடித்ததாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. ‘இதுபோலவே அண்டை கிரகங்களிலும் உயிர்கள் துளிர்விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன’ என்கிறார் கார்னெல் பல்கலைக்கழகத்தின் லிசா கல்ட்நெகர் தெரிவித்துள்ளார்.


மேலும், ”பூமியில் எப்படி புற ஊதாக்கதிர்களின் ஊடே உயிர்கள் துளிர்த்து வாழ்ந்துகொண்டிருக்கிறதோ அதுபோலத்தான். அதிகப்படியான கதிர்வீச்சு இருப்பதால் அண்டை கிரகங்களில் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு இல்லை என்பதை உறுதியாகக் கூறவே முடியாது” என்கிறது ஆய்வு.

மேலும் பார்க்க: இந்தியா மீண்டும் எங்கள் மீது தாக்குதல் நடத்த உள்ளது: பாகிஸ்தான்தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்