669 செக்ஸில் ஈடுபடுங்கள்... ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கிய அலிபாபா ஓனர்!

வாரத்திற்கு 6 நாட்கள், காலை 9 முதல் மாலை 9 மணிவரை என வேலை செய்ய வேண்டும்.

Web Desk | news18
Updated: May 16, 2019, 10:43 PM IST
669 செக்ஸில் ஈடுபடுங்கள்... ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கிய அலிபாபா ஓனர்!
அலிபாபா நிறுவனர் ஜாக் மா
Web Desk | news18
Updated: May 16, 2019, 10:43 PM IST
669 சூத்திரப்படி, கலவியில் ஈடுபடுங்கள் என்று ஊழியர்களுக்கு அலிபாபா நிறுவனர் ஜாக் மா ஆலோசனை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் மாதம், வாரத்திற்கு 6 நாட்கள், காலை 9 முதல் மாலை 9 மணிவரை என வேலை செய்ய வேண்டும் என்று தனது ஊழியர்களுக்கு ஜாக் மா தெரிவித்திருந்தது சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற அலிபாபா நிறுவனத்தின் ஆண்டு பொது கூட்டத்தில் 102 ஊழியர்களின் திருமணமும் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய ஜாக் மா 669 என்ற எண்ணை கூறி, வாரத்திற்கு 6 நாட்கள், 6 முறை என நீண்ட நேரம் கலவியில் ஈடுபடுங்கள் என்று கூறியுள்ளார்.


மறுபக்கம் சீன சமுக வலைத்தளங்களில் அலிபாபா ஊழியர்கள் வாரத்திற்கு 6 நாட்கள், காலை 9 முதல் மாலை 9 மணிவரை என வேலை செய்த பிறகு, வாரத்திற்கு 6 நாட்கள், 6 முறை என நீண்ட நேரம் கலவியில் ஈடுபடும் அளவிற்கு ஆற்றல் இல்லாதவர்களாக உள்ளனர் என்று கருத்தும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் பார்க்க:
First published: May 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...