முகப்பு /செய்தி /உலகம் / உள்ளாடையை மாஸ்க்காக அணிந்து வந்த விமானப் பயணி... பணியாளருடன் கடும் வாக்குவாதம்

உள்ளாடையை மாஸ்க்காக அணிந்து வந்த விமானப் பயணி... பணியாளருடன் கடும் வாக்குவாதம்

விமானத்திற்குள்ளே வரும் வரை மாஸ்க் அணிகிறார்கள். ஆனால் உள்ளே சாப்பிடுவதற்கும், தண்ணீர் குடிப்பதற்கும் மாஸ்க்கை கழட்டிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் அவர்கள் மாஸ்க் அணியவில்லை என்றுதானே அர்த்தம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மாஸ்க் அணியாமல் உள்ளாடை மூலம் முகத்தை மறைத்த விமானப் பயணி ஒருவருக்கும், விமான பணியாளருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், விமான பயணி கீழே இறக்கி விடப்பட்டார். அவருக்கு ஆதரவு தெரிவித்து சக பயணிகளும் கீழே, இறங்கியதால் இந்த விவகாரம் அமெரிக்கா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆடம் ஜேன் என்ற பயணி நேற்று முன்தினம் அமெரிக்காவின் ஃபோர் லாடர்டேல் நகரிலிருந்து வாஷிங்டன் செல்லும் யுனைட்டட் விமானத்தில் ஏறியுள்ளார். மாஸ்க் அணியாத ஜேன், உள்ளாடையை வைத்து முகத்தை மறைத்திருந்தார்.

அவர் இருக்கையில் அமர்ந்திருந்தபோது, அவரைப் பார்த்த பணிப்பெண், 'நீங்கள் மாஸ்க் அணியாவிட்டால் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்படுவீர்கள். உங்களை பயணம் செய்ய அனுமதிக்க மாட்டோம்' என்று கூறியுள்ளார்.

இதன்பின்னர் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் ஆடம் ஜேன் விமானத்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்டார். அவருக்கு ஆதரவாக சில விமான பயணிகளும் கீழே இறங்கி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க : இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: எங்கெல்லாம் மழை பெய்யும்?

இதுகுறித்து ஆடம் ஜேன் கூறுகையில், 'அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ளாடையை மாஸ்க்காக அணியலாம் என்று கூறப்பட்டிருந்தது. நான் எந்த விதிகளையும் மீறவில்லை. விமானத்திற்குள்ளே வரும் வரை மாஸ்க் அணிகிறார்கள். ஆனால் உள்ளே சாப்பிடுவதற்கும், தண்ணீர் குடிப்பதற்கும் மாஸ்க்கை கழட்டிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் அவர்கள் மாஸ்க் அணியவில்லை என்றுதானே அர்த்தம். ஏன் இந்த முரண்பாடு.' என்றார்.

இதையும் படிங்க : Omicron Variant | தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறி - ராதாகிருஷ்ணன்

 விமானத்தில் தனக்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்களுக்கு நன்றி தெரிவித்த ஆடம் ஜேன், அவர்கள் அநீதி நடப்பதை உணர்ந்து எனக்கு ஆதரவாக குரல் எழுப்பியதாக கூறினார்.

இதையும் படிங்க : பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பதிவு கட்டாயம்

உள்ளாடை அணிந்து விமானத்தில் ஏறிய ஆடம் ஜேன் விவகாரம் அமெரிக்காவில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Mask