Home /News /international /

கொரோனா லாக்டவுனால் காற்று மாசுப்பாட்டில், கால நிலையில் நிகழ்ந்த மாற்றம் என்ன? ஆய்வு கூறுவதென்ன?

கொரோனா லாக்டவுனால் காற்று மாசுப்பாட்டில், கால நிலையில் நிகழ்ந்த மாற்றம் என்ன? ஆய்வு கூறுவதென்ன?

காற்று மாசுபாடு அதிகளவில் குறைந்தது என்றாலும் மாசுபாடு குறைந்த காற்றால் நன்மை கிடைத்துள்ளதா என்றால் இல்லை என்கிறது புதிய ஆய்வு.

காற்று மாசுபாடு அதிகளவில் குறைந்தது என்றாலும் மாசுபாடு குறைந்த காற்றால் நன்மை கிடைத்துள்ளதா என்றால் இல்லை என்கிறது புதிய ஆய்வு.

காற்று மாசுபாடு அதிகளவில் குறைந்தது என்றாலும் மாசுபாடு குறைந்த காற்றால் நன்மை கிடைத்துள்ளதா என்றால் இல்லை என்கிறது புதிய ஆய்வு.

கொரோனா வைரஸால் உலக நாடுகள் பலவும் கடந்து ஆண்டு கடுமையாக பாதிப்படைந்தன. இன்னும் முழுமையாக அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல் சில நாடுகள் தவித்து வருகின்றன. இந்த வைரஸ் பாதிப்பு மனிதர்களை அதிகளவில் பாதித்ததோடு இயற்கையிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. கொரோனா தொடர்பான ஊரடங்கால் உலகின் பல நாடுகளிலும் வாகன போக்குவரத்து குறைந்தது. இதனால், காற்று மாசுபாடு அதிகளவில் குறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காற்று மாசுபாடு அதிகளவில் குறைந்தது என்றாலும் மாசுபாடு குறைந்த காற்றால் நன்மை கிடைத்துள்ளதா என்றால் இல்லை என்கிறது புதிய ஆய்வு.

ஒரு குறுகிய காலத்தில், கிழக்கு அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவின் சில இடங்களில் வெப்பநிலை ஒரு டிகிரியில் .3 முதல் .37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமாக இருந்தது. கார் புகை வெளியேற்றம் மற்றும் நிலக்கரியிலிருந்து குறைந்த சூட் மற்றும் சல்பேட் துகள்கள் காரணமாக இது பொதுவாக சூரியனின் வெப்பத்தை பிரதிபலிப்பதன் மூலம் தற்காலிகமாக வளிமண்டலத்தை குளிர்விக்கும் என்று ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் (journal Geophysical Research Letters) இதழில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, நம் பூமி கடந்த ஆண்டு சுமார் .05 டிகிரி (.03 டிகிரி செல்சியஸ்) வெப்பமாக இருந்தது, ஏனெனில் காற்றில் குறைவான குளிரூட்டும் ஏரோசோல்கள் இருந்ததே இதற்கு காரணம். இது கார்பன் டை ஆக்சைடு போலல்லாமல் நாம் காணக்கூடிய ஒருவகை மாசுபாடு என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வளிமண்டல ஆராய்ச்சி தேசிய மையத்தின் வளிமண்டல விஞ்ஞானியும் ஆய்வின் முன்னணி எழுத்தாளருமான ஆண்ட்ரூ கெட்டல்மேன் (Andrew Gettelman), "காற்றை சுத்தம் செய்வது உண்மையில் கிரகத்தை சூடேற்றும், ஏனெனில் அது (சூட் மற்றும் சல்பேட்) மாசுபாட்டை குளிர்விக்கும்" என்று காலநிலை விஞ்ஞானிகள் நீண்ட காலமாக கூறிவருகிறார்கள் என்று கூறினார்.

அவரது கணக்கீடுகள் 2020-ம் ஆண்டு வானிலையை கணினி மாதிரிகளுடன் ஒப்பிடும் போது தெரியவந்ததாக கூறினார்.  2020-ல் பல நாடுகள் லாக்டவுனை கொண்டிருந்ததே இதற்கு காரணம் என்றார். மேலும் இவை பூமியின் மாசுவை வேறுவிதத்தில் அதிகப்படுத்தியது என்றார். குறைவான வெப்பம், கார்பன் டை ஆக்சைடு உமிழ்வின் விளைவைக் காட்டிலும் குறைவான துகள்களிலிருந்து இந்த தற்காலிக வெப்பமயமாதல் விளைவு 2020-ல் வலுவாக இருந்தது, என்று கெட்டல்மேன் கூறியுள்ளார்.

கார்பன், வளிமண்டலத்தில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தி இருப்பதால், ஏரோசோல்கள் எப்போதும் காற்றில் இருக்கும். இந்த ஏரோசோல்கள் மாசை குறைக்காமல், 2020-ம் ஆண்டில் உலகளாவிய வெப்பநிலையை மேலும் அதிகரித்தது. ஏனெனில் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஆண்டின் நடுப்பகுதியில் நாம் அதிகமாக பயன்படுத்தியதால் (கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்தபின்) வெப்பமானது சற்று அதிகரித்தது.

மேலும் நாசாவின் அளவீட்டில் இந்த ஆராய்ச்சி உறுதிப்படுத்தபடுவதாக உள்ளது என்று நாசாவின் உயர் காலநிலை குறித்த ஆய்வை செய்துவரும் விஞ்ஞானி கவின் ஷ்மிட் கூறினார். "சுத்தமான காற்று, கிரகத்தை ஒரு சிறிய அளவிற்கு வெப்பமாக்குகிறது, இதுவே காற்று மாசுபாடு மக்களைக் கொல்கிறது" என்று கெட்டல்மேன் கூறினார். இதுதான் இயற்கையின் விந்தை. இயற்கையுடன் முன்னர் நாம் விளையாடிய விளையாட்டுதான் இப்போது இயற்கை நம்மிடம் விளையாடிப்பார்க்கிறது.
Published by:Ram Sankar
First published:

Tags: Air pollution, Corona virus

அடுத்த செய்தி