நடுவானில் ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: 337 பயணிகளுடன் லண்டனில் தரையிறக்கம்

விமானத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் மட்டுமே வந்ததாக ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

Web Desk | news18
Updated: June 28, 2019, 11:02 AM IST
நடுவானில் ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: 337 பயணிகளுடன் லண்டனில் தரையிறக்கம்
ஏர் இந்தியா விமானம்
Web Desk | news18
Updated: June 28, 2019, 11:02 AM IST
ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மிகுந்த பாதுகாப்புடன் லண்டனில் தரையிறக்கப்பட்டது.

மும்பையிலிருந்து இன்று காலை, அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இங்கிலாந்து வான் எல்லையில் பறந்தபோது, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் கூறப்பட்டது.

இதையடுத்து ஆயுதம் தாங்கிய போர் விமானங்கள் பாதுகாப்புடன் லண்டன் ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்தில், ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தின் ஒதுக்கப்புறமான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட ஏர் இந்தியா விமானம் சோதனையிடப்பட்டது.


ஆனால், விமானத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் மட்டுமே வந்ததாக ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. இத்தகவலை ஏர் இந்தியா நிறுவனம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.


ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ விமானம் லண்டனில் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ” உறுதிப்படுத்தினார். விமானத்தில் மொத்தம் 337 பேர்  பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க... 

குட்டிகளை சுமந்து கொண்டு குன்னூர் சாலையில் உலா வரும் தாய் கரடி!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published: June 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...