Home /News /international /

இன்ஷுரன்ஸ் சிக்கலால் Delhi - Moscow விமானத்தை கேன்சல் செய்த Air India.!

இன்ஷுரன்ஸ் சிக்கலால் Delhi - Moscow விமானத்தை கேன்சல் செய்த Air India.!

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

Air India | ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் உட்பட 36 நாடுகளின் விமானங்களுக்கு ரஷ்யா தனது வான்வெளியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதனிடையே ரஷ்ய செய்தி நிறுவனமான Tass ரஷ்ய தூதரகத்தின் சமீபத்திய அறிக்கை என்று கூறி கீழ்காணும் தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
உக்ரைன் - ரஷ்யா ஆகிய 2 நாடுகளிடையே நிலவி வரும் மோதல் மற்றும் இன்ஷுரன்ஸ் கவரேஜ் சிக்கல்கள் காரணமாக இந்திய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, வாரம் இருமுறை இயக்கப்படும் தனது டெல்லி - மாஸ்கோ விமானத்தை வியாழனன்று (7.4.22) ரத்து செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைனில் நடந்து வரும் ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில், ரஷ்ய வான்வெளியில் விமான காப்பீடு (flight insurance) செல்லுபடியாகாது என்ற எண்ணத்தில் ஏர் இந்தியா நிறுவனம் தனது டெல்லி - மாஸ்கோ சேவையை ரத்து செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல ஏற்கனவே டெல்லி - மாஸ்கோ விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

பிப்ரவரி இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து அனைத்து ரஷ்ய விமானங்களும் தங்கள் வான்வெளியில் பறக்க மேற்கத்திய நாடுகள் தடை விதித்தன. இந்தியா தனது வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கவில்லை. வாரத்திற்கு 2 முறை டெல்லி - மாஸ்கோ விமானங்களை ஏர் இந்தியா இயக்கி வருகிறது.

அனைத்து ஏர் இந்தியா விமானங்களும் சர்வதேச நிறுவனங்களால் காப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு அச்சுறுத்தல் காரணமாக இன்ஷுரன்ஸ் கவரேஜ் கிடைக்காமல் போகலாம் என்பதால் டெல்லி - மாஸ்கோ விமானத்தை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே டெல்லி-மாஸ்கோ-டெல்லி வழித்தடத்தில் டிக்கெட் விற்பனையை ஏர் இந்தியா நிறுத்தி விட்டது. சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக ரஷ்ய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.



ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் உட்பட 36 நாடுகளின் விமானங்களுக்கு ரஷ்யா தனது வான்வெளியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதனிடையே ரஷ்ய செய்தி நிறுவனமான Tass ரஷ்ய தூதரகத்தின் சமீபத்திய அறிக்கை என்று கூறி கீழ்காணும் தகவலை வெளியிட்டுள்ளது. "அன்புள்ள சக குடிமக்களே. இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா டெல்லி - மாஸ்கோ -டெல்லி வழித்தடத்தில் டிக்கெட் விற்பனையை நிறுத்தியுள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்,

Also Read : அம்மா சொர்க்கத்தில் சந்திக்கிறேன்.. போரில் உயிரிழந்த தாய்க்கு உக்ரைன் சிறுமி உருக்கமான கடிதம்

இந்த விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் தற்போது நிச்சயமற்றவை" என்று ரஷ்ய தூதரகம் கூறி இருப்பதாக Tass சுட்டி காட்டியுள்ளது. இருப்பினும் தாஷ்கண்ட், இஸ்தான்புல், துபாய், அபுதாபி, தோஹா மற்றும் பிற வழிகளை பயன்படுத்தி டெல்லியிலிருந்து மாஸ்கோவிற்கு வர முடியும் என்றும் ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

Also Read : கனடாவை மிரட்டும் Zombie நோய்.. மனிதர்களுக்கு பரவும் ஆபத்து..

இதனிடையே டெல்லி - மாஸ்கோ விமானம் கேன்சல் செய்யப்பட்டதை உறுதி செய்த ஏர்இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவர் விமானம் ரத்து செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Air India, Delhi, Russia - Ukraine

அடுத்த செய்தி