காலநிலை மாற்றத்தால் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகிக்கொண்டே வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அதிகப்படியான பனிப்பாறை நகர்வுகள் மற்றும் பனி உருகிய சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அப்படி தற்போது அண்டார்டிகாவில் உள்ள டூம்ஸ்டே பனிப்பாறை என்றும் அழைக்கப்படும் த்வைட்ஸ் பனிப்பாறை, உருகி அண்டார்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து கடலில் குறைந்துவிட்டதாக ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தகவல் வெளியாகியுள்ளன.
நேச்சர் ஜியோசயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், பனிப்பாறைகளை கண்காணிக்க ஆராய்ச்சியாளர்கள் கோப்பர்நிக்கஸ் சென்டினல்-1 செயற்கைக்கோள்கள் மற்றும் கடலோர அண்டார்டிகாவின் வழக்கமான செயற்கை துளை ரேடார் இமேஜிங் ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவு வழிமுறையுடன் இணைத்தனர். நுண்ணிய படங்களில் உள்ள செல்களை அடையாளம் காண AI அல்காரிதம் பயன்படுத்தப்பட்டது.
காலநிலை மாற்றம் நிலைமைகளை மோசமாக்குவதால், டூம்ஸ்டே பனிப்பாறையின் தலைவிதியை சிறப்பாகக் கணிக்க, மேலோட்டமான பனிக்கு அடியில் உள்ள பனி பிளவுகளைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு உதவி செய்கிறது. மேற்கு அண்டார்டிக் பனிப்பாறை வேகமாக உருகுவதற்கான கட்டத்தில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தினர்.
மேலும் தரவுகளின்படி கடந்த ஆறு ஆண்டுகளில், த்வைட்ஸ் பனிப்பாறை உருகி துண்டுகளாக பிரிந்து கடலில் கலக்கும் சம்பவம் இரண்டு முறை நடந்துள்ளதை பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் சுமார் 40% வரையிலான பனிப்பாறை உருகியுள்ளது. அது மட்டுமின்றி பனிப்பாறையின் முழு அளவில் இருந்து வருடத்திற்கு 4 கிமீ முதல் ஆண்டுக்கு 6 கிமீ வரை உருகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் ஒரு ஆண்டில் வேகமாக உருகுவதும் ஒரு ஆண்டில் குறைவாக உருகுவதுமாக உள்ளது.
"பனி அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்கள் பாரம்பரியமாக பல நூற்றாண்டுகள் பொறுமையாக நிகழும். ஆனால் இந்த பெரிய பனிப்பாறை குறுகிய காலத்தில் வேகமாகவும் மெதுவாகவும் உருகுவது ஆச்சரியமாக உள்ளது. பனி பாறைகளில் ஏற்படும் விரிசல்கள், பிளவுகள், பனி நகரும் வேகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது அன்பட்ரஸிங் என்று அழைக்கப்படுகிறது" என்று லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை நிபுணர் டாக்டர் அன்னா ஹாக் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஏற்கனவே அண்டார்டிகாவின் சில முக்கிய பனிப்பாறைகள் உருகிவிட்டநிலையில் இப்போது மேலும் ஒரு பெரிய பகுதி உருகியுள்ளது இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் வருத்தத்தை அளித்துள்ளது. இப்படியே சென்றால் அண்டார்டிகாவில் உள்ள முழு பனிப்பாறைகளும் உருகி அந்த கண்டமே இல்லாமல் ஆகிவிடுமோ என்று அஞ்சத் தொடங்கியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Antarctica