ஹோம் /நியூஸ் /உலகம் /

ஏவுகணை சோதனை : இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்த சீன கண்காணிப்பு கப்பல்..!

ஏவுகணை சோதனை : இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்த சீன கண்காணிப்பு கப்பல்..!

கண்காணிப்பு கப்பல்

கண்காணிப்பு கப்பல்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • chennai |

இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையே ஒரு பனிப்போர் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் நீண்ட நெடுங்காலமாக நடந்து வருகிறது.

வணிகத்தில் உலகின் கிழக்கு பகுதியையும் மேற்கத்திய மாடுகளையும் இணைக்கும் முக்கிய பாலமாக இந்தியபெருங்கடல் இருப்பதால் அதில் ஆதிக்கம் செலுத்துபவர் உலக வர்த்தகத்தில் பெரும் கையாக இருப்பர் என்பது திண்ணம்.

சில மாதங்களுக்கு முன்னர் இந்திய தனது ஏவுகணைகளை சோதனை செய்யும்போது சீனாவின் ஆராய்ச்சி மற்றும் விண்வெளி கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5, ஆகஸ்ட் மாதம் இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் நிறுத்தப்பட்டிருந்தது . அப்போதே அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் அதே போன்ற சம்பவம் ஒன்று மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஹிஜாப் அணியாத பெண் வீராங்கனை.. வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய ஈரான்.. பகீர் சம்பவம்!

அடுத்த வாரம் இந்தியா மற்றொரு நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை திட்டமிட்டுள்ள நிலையில் மீண்டும் சீன உளவுக் கப்பல் திங்களன்று இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தி வழியாக இந்தியப்பெருங்கடல் பகுதியுள் நுழைந்துள்ளது இந்திய கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 15-16 தேதிகளில் ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவுகணை சோதனைக்காக வங்காள விரிகுடாவில் பறக்கும் மண்டலம் அற்ற பகுதிகளை விரிவாக்கி செய்தி வெளியிட்ட பின்ன இந்த கப்பல் இங்கே கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிக வலிமையான அக்னி-வி ஏவுகணை, 5,000 கிமீ தூரம் வரை சென்று தாக்கும். இது முப்படைகளின் மூலோபாய படைகள் கட்டளையில் (SFC) சேர்க்கப்படும் நிலையில், சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

20,000 டன் எடையுள்ள யுவான் வாங்-5, பெரிய ஆண்டெனாக்கள், மேம்பட்ட சென்சார்கள் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்களுடன் சுமார் 400 பணியாளர்களுடன் நிரம்பியுள்ளது. கப்பல்கள் செல்லும் வழி ஆராய்தல், மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் செயல்பாடுகளுக்குப் பயன்படும் கடல்சார் மற்றும் பிற தரவுகளை வரைபடமாக்க சீன ஆய்வுக் கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதிக்கு தொடர்ந்து வருகின்றன. அதுமட்டும் இல்லாமல் அனைத்து நாடுகளுக்கும் சர்வதேச கடலில் செல்ல சுதந்திரம் உள்ளது.

எனவே அந்த கப்பலின் வரவு குறித்து இந்தியா எந்த கேள்வியும் கேட்க முடியாது . ஆனால் இந்த கப்பல் வரவால் ஏவுகணை சோதிக்கும் திட்டம் என்பது திட்டமிட்டபடி நடக்குமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

First published:

Tags: China