சீன மாணவர்களை இழக்கும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள்?

2017-18 கல்வி ஆண்டில் மட்டும் சுமார் 3,60,000 சீன மாணவர்கள் அமெரிக்கக் கல்வியை நிறைவு செய்துள்ளனர்.

Web Desk | news18
Updated: June 4, 2019, 3:48 PM IST
சீன மாணவர்களை இழக்கும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள்?
மாதிரிப்படம். (Photo: Reuters)
Web Desk | news18
Updated: June 4, 2019, 3:48 PM IST
சீன மாணவர்கள் அமெரிக்காவில் படிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற செய்தி சீனாவில் வெளியானதில் இருந்து அமெரிக்க பல்கலைக்கழகங்கள் கலக்கத்தில் உள்ளனர்.

வர்த்தகப் போரால் சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் தற்போது மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், சமீபத்தில் அமெரிக்காவில் படிக்க விரும்பும் சீன மாணவர்களுக்கு விசா நீட்டிப்பதில், புதிதாக விசா வழங்குவதில் என பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்காவில் பயிலும் தங்கள் மாணவர்களை எச்சரிக்கும் விதத்தில் சீனா ஊடகங்களில் பல செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால், அமெரிக்காவின் கல்வித்துறைக்கு மிகப்பெரிய வருமானத்தை அளித்து வரும் சீன மாணவர்களை இழந்துவிடுவோமா என்ற மிகப்பெரிய கலக்கத்தில் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் உள்ளன.

2017-18 கல்வி ஆண்டில் மட்டும் சுமார் 3,60,000 சீன மாணவர்கள் அமெரிக்க கல்வியை நிறைவு செய்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இது மும்மடங்கு அதிகரிப்பதுதான் ஆச்சர்யம். ஆனால், ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதே தற்போதைய அமெரிக்கக் கல்வியாளர்களின் விவாதப் பொருளாக உள்ளது.

மேலும் பார்க்க: அமெரிக்காவில் படிக்கும் தங்கள் நாட்டு மாணவர்களை எச்சரிக்கும் சீன ஊடகங்கள்!
First published: June 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...