ஹோம் /நியூஸ் /உலகம் /

2024-ல் நிலவு...2033-ல் செவ்வாய்...’நச்’ ப்ளான் உடன் நாசா!

2024-ல் நிலவு...2033-ல் செவ்வாய்...’நச்’ ப்ளான் உடன் நாசா!

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகம்

பூமியில் இருந்து செவ்வாயை சென்றடையும் காலம் 6 மாதங்கள்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

வருகிற 2033-ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில் கால் பதித்துவிட வேண்டும் என்பதே குறிக்கோள் என நாசா தெரிவித்துள்ளது.

நாசா-வின் தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் நாசாவின் வருங்கால குறிக்கோள்கள் குறித்துப் பேசுகையில், “நிலவில் கால் பதித்தப் பின்னர் செவ்வாய் கிரகத்தை நாம் சென்றடைய வேண்டும். 2033-ம் ஆண்டில் செவ்வாய் கிரக சாதனையை நாம் நிகழ்த்தியே ஆக வேண்டும்” என்றார்.

முன்னாள் குடியரசுக்கட்சியின் மூத்த அரசியல்வாதியான ஜிம் பிரிடென்ஸ்டைன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மூலம் நாசா தலைமைப் பதவியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். நிலவில் மனிதனைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் நாசா வருகிற 2024-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

2024-ம் ஆண்டு என்பது அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி வகிக்கும் கடைசி ஆண்டு என்பதால் அரசியல் நோக்கிலும் நாசாவின் முயற்சி அணுகப்படுகிறது. இதற்கான கால அட்டவணையைத் தயாரிக்கும் பணியில்தான் தற்போது நாசா முழுநேரமாக ஈடுபட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் கால் பதிக்க நினைத்தால் அதற்கான முயற்சி காலம் இரண்டு ஆண்டுகள் பிடிக்குமாம். பூமியில் இருந்து செவ்வாயை சென்றடையும் காலம் 6 மாதங்கள். மேலும், பூமியைப் போலவே சூரியனின் நேர்கோட்டில் இருக்கும் காலத்தில்தான் செவ்வாய் கிரகத்துக்குப் பயணிக்க முடியுமாம். இந்த நேர்கோடு வாய்ப்பு 26 மாதங்களுக்கு ஒருமுறை தான் அமையும் என்றும் கூறப்படுகிறது.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


மேலும் பார்க்க: கடல் நீருக்கு அடியில் இயங்கும் உணவகம்!

Published by:Rahini M
First published:

Tags: Donald Trump, MARS, NASA