அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவர் வடகொரியாவுக்குச் சென்றது இதுவே முதன் முறை.
ஜி20 மாநாடு முடிந்து அமெரிக்கா திரும்பிய டொனால்ட் டிரம்ப் வழியில் நேற்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை திடீரென சந்தித்து பேசினார்.
இருவரும் தென்கொரியா-வடகொரியா போருக்கு பின்னர் சமாதானப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பன்முன்ஜோம் நகரில் சந்தித்து கொண்டனர். இந்த பகுதி ராணுவமற்ற பகுதி என்று அழைக்கப்படுகிறது.
இதற்கு முன்பு இருவரும் சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் தலைநகர் ஹனாய் ஆகிய இடங்களில் சந்தித்து கொண்டனர்.
இதன் பிறகு இருநாட்டுத் தலைவர்களும் மீண்டும் 2 வாரங்களுக்குப் பிறகு சந்தித்துப் பேச உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
வடகொரிய எல்லைக்குள் சென்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை டொனால்டு டிரம்ப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க... நிலச்சரிவில் சிக்கி 61 பேர் உயிரிழப்பு: பாலம் உடையும் பதறவைக்கும் காட்சி!
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.