தீவிரமடையும் கொரோனா பாதிப்பு... ஸ்பெயின், இத்தாலியை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்தில் இந்தியா

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வரும் நிலையில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 5-வது இடத்திற்கு வந்துள்ளது.

தீவிரமடையும் கொரோனா பாதிப்பு... ஸ்பெயின், இத்தாலியை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்தில் இந்தியா
கோப்பு படம்
  • Share this:
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை நெருங்க நிலையில் 4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளது.

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலி, ஸ்பெயினை விட இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிக்கையின் படி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,45,670 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,41,310 ஆக உள்ளது.

கொரோனாவில் இந்தியாவை விட பாதிக்கப்பட்ட நாடுகளாக தற்போது அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் உள்ளது. அதற்கு அடுத்து 5-வது இடத்தில் இந்தியா உள்ளது. வரும் நாட்களில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்தால் பிரிட்டனை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
First published: June 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading