Home /News /international /

ஒபாமாவைத் தொடர்ந்து சினிமா துறையில் கால் பதிக்கும் ஹிலாரி!

ஒபாமாவைத் தொடர்ந்து சினிமா துறையில் கால் பதிக்கும் ஹிலாரி!

ஹிலாரி கிளிண்டன். (Image: Reuters)

ஹிலாரி கிளிண்டன். (Image: Reuters)

தற்போது ஒபாமா தம்பதியர் மூன்று திரைப்படங்கள், 4 டிவி சீரிஸ்-களைத் தயாரித்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
அமெரிக்காவின் மூத்த அரசியல் தலைவரான ஹிலாரி கிளிண்டன் சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்க உள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் செயலாளரான ஹிலாரி கிளிண்டன் தன் மகள் செல்சி கிளிண்டன் உடன் இணைந்து புதிதாக டிவி நிகழ்ச்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்க உள்ளார்.

பெண்கள் மற்றும் பெண்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்தப் படத்தயாரிப்பு நிறுவனம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஹிலாரி கடந்த ஆண்டு ஹாலிவுட் படமான ‘தி வுமன் ஹவர்’ என்ற திரைப்படத்தை ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் உடன் இணைந்துத் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் மிச்சேல் ஒபாமா இணைந்து சமீபத்தில்தான் படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினர்.

தற்போது ஒபாமா தம்பதியர் மூன்று திரைப்படங்கள், 4 டிவி சீரிஸ்-களைத் தயாரித்து வருகின்றனர்.

மேலும் பார்க்க: 'உளவியல் ரீதியாக டார்ச்சர் செய்யப்பட்டுள்ளார் அசாஞ்சே’ - ஐ.நா
Published by:Rahini M
First published:

அடுத்த செய்தி