ஹோம் /நியூஸ் /உலகம் /

தேர்தலில் படுதோல்வி.. வாக்குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்ற உத்தரவிட்ட டிரம்ப்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

தேர்தலில் படுதோல்வி.. வாக்குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்ற உத்தரவிட்ட டிரம்ப்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

டொனால்டு ட்ரம்ப்

டொனால்டு ட்ரம்ப்

Donald Trump | 29 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்க அதிபராக உள்ள ஒருவர் இரண்டாவது முறை தேர்வாகாமல் தோல்வியை தழுவினார் டிரம்ப்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப், வாக்குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்ற பாதுகாப்புச் செயலருக்கு உத்தரவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

  2020- ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப், ஜோ பைடனிடம் படு தோல்வி அடைந்தார். 29 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்க அதிபராக உள்ள ஒருவர் இரண்டாவது முறை தேர்வாகாமல் தோல்வியை தழுவினார். எனினும் தோல்வியை ஒப்புக்கொள்ளமல் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக டிரம்ப் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.

  தேர்தல் முடிவுகள் செல்லாது என அறிவிக்க உச்ச நீதிமன்றம் வரை சென்ற போதிலும் அவரது முயற்சி நிறைவேறவில்லை. பின்னர் நாட்டின் உயர்மட்ட பாதுகாப்புச் செயலருக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கைப்பற்ற உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

  மேலும் படிக்க: சோதனையில் சிக்காத "கள்ள ஒமைக்ரான்".. முந்தைய வகைகளைக் காட்டிலும் அதிவேகமாக பரவுவதால் அச்சம்!

  தேசிய ஆவணக் காப்பகத்தில் இருந்து The Politico என்ற நாளிதழ் பெற்றுள்ள ஆவணங்களில், பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராக அதிகாரத்தில் இருக்க டிரம்ப் முடிவெடுத்தது அம்பலமாகியுள்ளது. 2020- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16- ஆம் தேதி டிரம்ப் பிறப்பித்த உத்தரவில், தேர்தல் மோசடி நடந்திருப்பதாக கூற சிறப்பு வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கவும் ஆவண செய்யப்பட்டுள்ளது.

  2021- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6- ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற முற்றுகை குறித்து விசாரணை நடத்தி வரும் பிரிதிநிதிகள் சபை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட 750 ஆவணங்களில், டிரம்ப் பிறப்பித்த உத்தரவும் இடம் பெற்றுள்ளது.

  டிரம்ப் எழுதிய 3 பக்க ஆவணத்தில் அனைத்து இயந்திரங்கள், உபகரணங்கள், மின்னணு முறையில் சேமிக்கப்பட்ட தகவல்கள் ஆகியவற்றை பாதுகாப்புச் செயலர் கைப்பற்றி 50 மாகாணங்களிலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்த ஆவணங்களில் டிரம்ப் கையெழுத்திடவில்லை என்பதால் அந்த உத்தரவுகள் செயல்படுத்தப்படவில்லை.

  வெனிசுலா, கியூபா மற்றும் சீனா போன்ற கம்யூனிச நாடுகள் தேர்தலை சீர்குலைத்தாக டிரம்பின் ஆதரவாளரும் வலதுசாரி வழக்கறிஞருமான சிட்னி பவல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்தார். ஜார்ஜியா மாகாணத்தில் பயன்படுத்தப்பட்ட டோமினியன் என்ற நிறுவனம் தயாரித்த வாக்குப்பதிவு இயந்திரம் வெளிநாட்டு ஏஜென்டுகளால் கட்டுப்படுத்தப்பட்டதாக சிட்னி பவல் குற்றம்சாட்டி வந்தார். இந்த குற்றச்சாட்டுக்களை டிரம்ப் கட்சியினரே மறுத்து வந்தனர். சிட்னி பவல் மீது டோமினியன் நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.

  மேலும் படிக்க: இந்திய பெருங்கடலில் ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் நாடுகளின் கடற்படை கூட்டுப்பயிற்சி!

  Published by:Esakki Raja
  First published:

  Tags: America, Donald Trump, US Election 2020