• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • Sri Lanka Election: கோத்தபய ராஜபக்சேவுக்கு வெற்றி வாய்ப்பு...

Sri Lanka Election: கோத்தபய ராஜபக்சேவுக்கு வெற்றி வாய்ப்பு...

 ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே

ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே

  • News18
  • Last Updated :
  • Share this:
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வருகிற 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவும், எதிர்க்கட்சி வேட்பாளராக இலங்கை பொதுஜன பெரமுனா சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் ஒரு கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில், 16 லட்சம் பேர் முதல் தலைமுறை வாக்காளர்கள்.

அதிபர் தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், கோத்தபய ராஜபக்சேவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also see...

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: