ஹோம் /நியூஸ் /உலகம் /

தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஊழியர்களுக்கு எச்சரிக்கை - ஐடி பெறுநிறுவனம் அறிவிப்பு!

தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஊழியர்களுக்கு எச்சரிக்கை - ஐடி பெறுநிறுவனம் அறிவிப்பு!

இன்டெல்

இன்டெல்

அனுமதிக்கப்பட்ட மருத்துவம் மற்றும் பிற காரணங்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத இன்டெல் ஊழியர்கள், ஜனவரி 4 2022 ஆம் தேதிக்குள் அதைப் பற்றி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

பல நாடுகளிலும், வரும் ஜனவரி மாதம் முதல் ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அனைவரின் பாதுகாப்பு கருதி, பணிக்குத் திரும்பும் எல்லா ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை பல தொழில்நுட்ப நிறுவனங்களும் அறிவித்திருந்தது. மருத்துவக் காரணங்கள் தவிர்த்து, தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரமுடியாது என்று கூகுள் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னரே வெளிப்படையாக அறிவித்தது. கூகுளைத் தொடர்ந்து, மற்றொரு பெரிய ஐடி நிறுவனமான இன்டெல் நிறுவனமும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஊழியர்கள் பணிக்குத் திரும்புவதைப் பற்றி சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அனுமதிக்கப்பட்ட மருத்துவம் மற்றும் பிற காரணங்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத இன்டெல் ஊழியர்கள், ஜனவரி 4 2022 ஆம் தேதிக்குள் அதைப் பற்றி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்க தவறினால், ஏப்ரல் மாதம் முதல் சம்பளம் வழங்காமல் விடுப்பு அமல்படுத்தப்படும் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அல்லது சில காரணங்களுக்காக தடுப்பூசி போட முடியாத ஊழியர்கள் அனுப்பும் விவரங்களை மார்ச் மாதத்திற்குள் இன்டெல் நிறுவனம் மதிப்பாய்வு செய்து, அனுமதிக்கும் அல்லது மறுக்கும்.

Also read... புதிதாக 17.6 லட்சம் மொபைல் யூஸர்களை பெற்ற ஜியோ - பலத்த அடிவாங்கிய ஏர்டெல் மற்றும் விஐ!

அமெரிக்க அரசாங்கத்தின் ஆணைப்படி கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதில் தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தி கொள்வதும் ஒரு பகுதியாகும். இதை முதல் முறையாக கூகுள் நிறுவனம் அறிவித்தது. ஊழியர்கள் அதை செய்யத் தவறினால் அவர்களுக்கு சம்பளம் நிறுத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது. அமெரிக்க அரசு 100 அல்லது அதற்கும் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்களில், அனைத்து ஊழியர்களுமே முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் covid-19 பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

Also read... Vi வாடிக்கையாளர்கள் தங்கள் டேட்டா பேலன்ஸ், பிளான் வேலிடிட்டியை எவ்வாறு சரிபார்ப்பது?

இந்த விதிமுறைகளை பின்பற்றும் வகையில் ஏற்கனவே கூகுள் நிறுவனத்தின் ஒன்றரை லட்சம் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட தகவலை அப்டேட் செய்துள்ளனர்.

கூகுள் நிறுவனத்தின் அறிக்கை படி, வரும் ஜனவரி 13 ஆம் தேதிக்குள் முழுதாக தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரங்கள் அல்லது செலுத்திக் கொள்ள முடியாது என்பதற்கான விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்த தேதிக்குள் விவரங்களை அனுப்பத் தவறினால், ஊழியர்களுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும்.

Also read... குளிர்காலம் தொடங்கியதை வரவேற்க கூகுள் வெளியிட்டிருக்கும் அனிமேட்டட் டூடுல்!

30 நாட்களுக்குள் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டது அல்லது எடுத்துக் கொள்ள முடியவில்லை என்பது பற்றி விவரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால் ஆறு மாதம் சம்பளம் இல்லாத விடுப்பு அளிக்கப்படும். அதற்குப் பிறகும் முறையான காரணங்களுடன் தகவல்களை சமர்ப்பக்க முடியவில்லை என்றால் அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது.

கூகுளை பின்பற்றும் இன்டெல் நிறுவனமும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதின் அவசியத்தை அறிவித்தா நிலையல், ஜனவரி 10-ஆம் தேதி முதல் அலுவலகம் வழக்கம்போல இயங்கலாம் என்பதை ஒமைக்ரான் தொற்று பாதிப்பால் மறுபரிசீலனை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Corona Vaccine, Omicron