ஹோம் /நியூஸ் /உலகம் /

தொடரும் அதிர்ச்சி! - 99 குழந்தைகள் பலி.. இருமல் சிரப்புகளுக்கு தடை விதித்த இந்தோனேசியா!

தொடரும் அதிர்ச்சி! - 99 குழந்தைகள் பலி.. இருமல் சிரப்புகளுக்கு தடை விதித்த இந்தோனேசியா!

இந்தோனேசியாவில் சிரப் மருந்துகளுக்கு தடை

இந்தோனேசியாவில் சிரப் மருந்துகளுக்கு தடை

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான அதிர்ச்சி தகவல் வெளியானது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaJakarta Jakarta

  இந்தோனேசியாவில் சுமார் 100 குழந்தைகள் இறந்ததையடுத்து அந்நாட்டில் அனைத்து விதமான சிரப் (syrup) மருந்துகளின் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  இருமல் மருந்து உட்கொண்டதன் காரணமாக குழந்தைகளுக்கு சிறுநீரக பாதிப்புகள் ஏற்பட்டு, நடப்பாண்டு மட்டும் ஐந்து வயதுக்குட்பட்ட 99 குழந்தைகள் உயிரிழந்ததாக இந்தோனேசிய சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது. குறிப்பிட்ட அந்த இருமல் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டவையா அல்லது உள்ளூரில் தயாரானவையா எனத் தெளிவாகத் தெரியவில்லை.

  அந்நாட்டின் சுகாராதத்துறை தகவலின்படி, ஐந்து வயதுக்கும் குறைவான சுமார் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு தீவிர சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது பரிசோதனையில் உறுதியானது. பதிவான எண்ணிக்கையை விட உயிரிழப்புகள் கூடுதலாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே,அனைத்து விதமான இருமல் மருந்துகள் மற்றும் திரவ மருந்துகளின் விற்பனைக்கும் இந்தோனேசிய அரசு தடை விதித்துள்ளது.

  முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில், தற்போது இந்தோனேசியாவிலும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காம்பிய நாட்டு மருந்துகளை ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்திய போது, அதில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக டை எத்திலீன் கிளைக்கால், மற்றும் எத்திலீன் கிளைக்கால் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: தலைவரின் புகழ் பாட மறுப்பு... ஈரானில் 15 வயது பள்ளி மாணவியை அடித்துகொன்ற போலீஸ்

  இதனை தொடர்ந்து உலகம் சுகாதார அமைப்பு அக்டோபர் 5ம் தேதி இந்திய ஃபார்மா நிறுவனமான மெய்டன் ஃபார்மாசீயுடிகல்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மற்றும் ஜலதோஷத்துக்காக கொடுக்கப்படும் நான்கு வகை சிரப்-களையும் தடை செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Indonesia, Medicine