ஹோம் /நியூஸ் /உலகம் /

NATOவில் சேர விருப்பம் தெரிவித்த பின்லாந்து - கரண்ட் சப்ளை கட் செய்த ரஷ்யா

NATOவில் சேர விருப்பம் தெரிவித்த பின்லாந்து - கரண்ட் சப்ளை கட் செய்த ரஷ்யா

நன்றி : Shutterstock

நன்றி : Shutterstock

பின்லாந்தின் 10 சதவீத மின்சாரத் தேவையை ரஷ்யா பூர்த்தி செய்யும் நிலையில், நேட்டோ தொடர்பான பின்லாந்தின் நிலைப்பாட்டுக்கு எதிராக இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பின்லாந்து நாட்டிற்கான மின் விநியோகத்தை நிறுத்துவதாக ரஷ்ய அதிரடியாக அறிவித்துள்ளது. அமெரிக்க - ஐரோப்பிய கூட்டமைப்பான நேட்டோவில் இணைய பின்லாந்து விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அதன் எதிர்வினையாக ரஷ்யா இம்முடிவை மேற்கொண்டதாகக் கருதப்படுகிறது.

நேட்டோவில் சேர பின்லாந்து விருப்பம் தெரிவித்த உடனே, இதற்கான எதிர்வினைகளை பின்லாந்து சந்திக்க நேரிடும் என ரஷ்ய தரப்பு எச்சரிக்கை தெரிவித்திருந்தது. பின்லாந்தின் இந்த முடிவு ரஷ்யாவுக்கு அபாயத்தை தரும் என ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யாவுடன் சுமார் 1,300 கிமீ நீளத்திற்கான எல்லையை பின்லாந்து பகிர்ந்துகொள்கிறது. அத்துடன், பின்லாந்தின் 10 சதவீத மின்சாரத் தேவையை ரஷ்யா பூர்த்தி செய்கிறது.

ரஷ்யாவின் இந்த முடிவு தொடர்பாக பின்லாந்து மின்சாரத்துறை கூறுகையில், ரஷ்யாவின் இந்த முடிவால் பின்லாந்து பாதிப்பை ஏதும் சந்திக்காது. ஸ்வீடனில் இருந்து கூடுதலாக இறக்குமதி செய்து மின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்வோம். அத்துடன், அடுத்தாண்டுக்குள் மின்சாரத்தில் பின்லாந்து நாடு தன்னிறைவு பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பின்லாந்தை போலவே, ஸ்வீடனும் நேட்டோ அணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் இரு நாடுகளும் அடுத்த வாரம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கிய நிலையில், ஐரோப்பிய கண்டத்தில் இதன் தாக்கம் பல்வேறு கோணங்களில் எதிரொலித்துவருகிறது. பிரிட்டனின் வெளியேற்றத்திற்கு பின் ஐரோப்பிய ஒன்றியம் பலவீனம் அடையும் எதிர்பார்த்த நிலையில், ஐரோப்பிய நாடுகள் இடையே தற்போது ஒற்றுமை கூடியுள்ளது. அத்துடன், போர் பாதிப்புக்குள்ளான உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுத, நிதியுதவிகளை ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா வழங்கி வருகிறது.

இதையும் படிங்க: 3,000 அடி உயரத்தில் உலகின் மிக நீளமான தொங்கும் பாலம் திறப்பு

பல்வேறு பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் தனது போர் நடவடிக்கையில் இருந்து பின் வாங்க மாட்டேன் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் விடாப்பிடியாக உள்ளார்.

First published:

Tags: NATO Force, Russia - Ukraine