• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பாண்டா குட்டிகளுக்கான பெயர் சூட்டுவிழா - ஜப்பானில் சுவாரஸ்ய நிகழ்வு!

பாண்டா குட்டிகளுக்கான பெயர் சூட்டுவிழா - ஜப்பானில் சுவாரஸ்ய நிகழ்வு!

பாண்டா குட்டிகளுக்கான பெயர் சூட்டுவிழா

பாண்டா குட்டிகளுக்கான பெயர் சூட்டுவிழா

ஜப்பானைப் பொறுத்தவரை பாண்டாக்களுக்கான மதிப்பு மிகமிக அதிகம். பூங்கா நிர்வாகம், பாண்டாக்களுக்கான இரண்டு பெயர்களை தேர்ந்தெடுத்து, பெயர்சூட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தியது.

  • Share this:
ஜப்பானில் புதிதாக பிறந்த இரு பாண்டா குட்டிகளுக்கு 3 மாதங்களுக்குப் பிறகு பிரம்மாண்டமாக பெயர் சூட்டுவிழா நடைபெற்றது.

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் யுனோ மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இருக்கும் ஒரு பாண்டா கடந்த ஜூன் மாதம் இரு பாண்டா குட்டிகளை ஈன்றது. ஒரு பெண், ஒரு ஆண் என இரு பாண்டாக்கள், அங்குள்ள பாண்டாக்களின் எண்ணிக்கையில் சேர்ந்துள்ளது. இந்த பாண்டாகளுக்கான பொருத்தமான பெயரை தேர்ந்தெடுத்து அனுப்புமாறு, பூங்கா நிர்வாகம் ஜப்பான் மக்களிடம் கோரிக்கை விடுத்தது.

இந்த கோரிக்கைக்கு சுமார் 1,90,000 கடிதங்கள் யுனோ பூங்காவுக்கு வந்தது. இதனை பரிசீலித்த பூங்கா நிர்வாகம், பாண்டாக்களுக்கான இரண்டு பெயர்களை தேர்ந்தெடுத்து, பெயர்சூட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தியது.

Panda Cubs at Tokyo Zoo Finally Get Names

பாண்டா குட்டி


இந்த விழாவில் டோக்கியோ கவர்னர் யுரிகோ கோய்கெ கலந்து கொண்டு பாண்டாக்களுக்கு பெயர் சூட்டினார். ஆண் பாண்டாவுக்கு சியாயோ சியாயோ (Xiao Xiao) என்றும், பெண் பாண்டா குட்டிக்கு லெய் லெய் என பெயர் வைத்தார்.



இதுகுறித்து பேசும்போது, புதிதாக பிறந்துள்ள பாண்டா குட்டிகளுக்கான பெயர் சூட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். பாண்டாக்களுக்கு பெயர் பரிந்துரைக்குமாறு பூங்கா நிர்வாகம் கேட்டுக் கொண்டதன்பேரில், மக்கள் கொடுத்த வரவேற்பு அமோகமாக இருந்ததாக தெரிவித்த யுரிகோ கெய்கே, சியாயோ சியாயோ மற்றும் லெய் லெய் பெயர்கள் எதிர்காலத்துக்கான வெளிச்சம் என்ற பொருளில் தேர்ந்தெடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறினார். இந்தப் பெயர்களின் மூலம் பாண்டாகளுக்கு, எதிர்காலத்தில் நல்ல ஒளி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் பேசினார்.

Panda Cubs at Tokyo Zoo Finally Get Names
பாண்டா குட்டி


பூங்கா நிர்வாகம் புதிய பாண்டா குட்டிகளுக்கு பெயர் சூட்டுவது குறித்து வெளியிட்ட அறிக்கையில், யுனொ மிருக்கக்காட்சி சாலையில் புதிதாக இரு பாண்டா குட்டிகள் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என தெரிவித்தது. பாண்டாக்களுக்கு பெயர்கள் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டபோது ஏறத்தாழ 2 லட்சம் கடிதங்கள் வந்ததாகவும், அவை ஒவ்வொன்றும் கவனமாக பரிசீலிக்கப்பட்டு பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் பூங்கா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. பாண்டா குட்டிகளுக்கு சூட்டப்பட்ட பெயர்களைப் போலவே அவை பிரகாசமானவையாக மிளிரும் என்றும் கூறியுள்ளது.



புதிய பாண்டா குட்டிகள் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பாண்டா குட்டிகள் இரண்டும் ஒன்றோடொன்று முட்டி மோதிக்கொண்டு அழகாக விளையாடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் சுமார் 6 கிலோ எடையில் இருக்கின்றன.

Panda Cubs at Tokyo Zoo Finally Get Names
பாண்டா குட்டி


சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு எப்போது இந்த பாண்டாக்கள் காண்பிக்கப்படும் என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ள பூங்கா நிர்வாகம், பிறந்ததில் இருந்து 6 மாதங்களுக்குப் பிறகு, அதாவது வரும் ஜனவரி மாதம் முதல் சுற்றுலாப் பயணிகள் புதிய பாண்டா குட்டிகளை பார்வையிடலாம் என தெரிவித்துள்ளது. ஜப்பானைப் பொறுத்தவரை பாண்டாக்களுக்கான மதிப்பு மிகமிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: