• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இயேசு கிறிஸ்து போல் உயிர்த்தெழுவேன்.. பாதிரியார் எடுத்த விபரீத முடிவு – மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்

இயேசு கிறிஸ்து போல் உயிர்த்தெழுவேன்.. பாதிரியார் எடுத்த விபரீத முடிவு – மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்

பாதிரியார் எடுத்த விபரீத முடிவு

பாதிரியார் எடுத்த விபரீத முடிவு

பாதிரியார் ஜேம்ஸ் உயிரிழந்தது மூன்று நாள்களுக்கு பிறகு தெரியவந்தது.

  • Share this:
    ஆப்பிரிக்காவின் ஜாம்பியா நாட்டில், தான் இயேசு தூதுவர் என்றும் 3 நாட்களுக்கு பின் இயேசுவை போல் உயிர்த்தெழுந்து விடுவேன் என்று தன்னைத்தானே குழி தோண்டி மண்ணில் புதைந்து கொண்ட பாஸ்டர் ஜேம்ஸ் உயிரிழந்தார்

    இயேசு கிறிஸ்து துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையப்பட்டு, உயிர்துறந்து, கல்லறையில் அடைக்கப்பட்ட பிறகும், சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார் என்பது கிறித்தவர்களின் உறுதியான நம்பிக்கை. ஆப்பிரிக்கா நாடான ஜாம்பியாவை சேர்ந்த பாதிரியாரான ஜேம்ஸ் சக்காரா (வயது 22 )தான் இயேசுவின் தூதுவர் என்றும் 3 நாட்களுக்கு பின் இயேசுவை போல் உயிரித்தெழுந்துவிடுவேன் எனக் கூறியுள்ளார்.

    Also Read: பாராலிம்பிக் போட்டி : வரலாற்று சாதனை படைத்த பவினா படேல்

    இதனையடுத்து அவர் சார்ந்திருக்கும் தேவாலயம் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் மண்ணில் குழித்தோண்டி தன்னைத்தானே புதைத்துக்கொண்டார். சவக்குழியில் பாதிரியார் படுத்துக்கொண்டதும் அந்த தேவாலயத்தை சேர்ந்த மற்றொரு பாதிரியார் அவரது கைகளை கட்டியுள்ளார். ஊழியர்கள் இருவர் மண்ணைப்போட்டு அந்த இடத்தை மூடியுள்ளனர். மூன்று நாள்களுக்கு பிறகு சென்று பார்த்தபோது அந்த பாதிரியார் உயிரிழந்தது தெரியவந்தது.

    Also Read: தங்கக்கடத்தல்.. சினிமா பாணியில் கார் சேஸிங் - டிரைவர் கடத்தலில் திடீர் திருப்பம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பாதிரியாரின் உடலை எடுத்துச்சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தேவாலயத்தை சேர்ந்த மற்றொரு பாதிரியாரை கைது செய்துள்ளனர். பாதிரியார் ஜேம்ஸ் உதவியாக இருந்த இரண்டு ஊழியர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: