ஆப்கானிஸ்தானில் பள்ளி, கல்லூரிகள் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் மாணவிகள் இடையே திரை அமைத்து மறைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், மாணவிகள் பார்த்துக்கொள்ளாதபடி தடுப்பு வைத்து வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தாலிபான் ஆட்சி அமையவுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக அந்நாட்டில் ஏற்பட்ட வளர்ச்சி சீர்குலைந்து மீண்டும் இருண்ட காலத்திற்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பெண்கள் கூறிவருகின்றனர். தங்களின் கல்வி, வேலை உரிமைகள் பறிக்கப்படலாம் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
மகள்களின் கல்வி உரிமையை பறிக்கக் கூடாது என்பதை வேண்டு ஏராளமான தாய்மார்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தாங்கள் புர்கா அணிய தயார் என்றும் ஆனால் தங்கள்பெண் குழந்தைகளின் படிப்பில் இடையூறு ஏற்படக்கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெண்கள் உரிமை பறிக்கப்படாது என்றும் அவர்கள் முன்பு போல் கல்வி பயிலலாம் என்றும் தாலிபான்கள் அறிவித்தனர். அதேவேளையில், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டும் , தங்கள் முகத்தை பெரும்பாலும் மூடி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக திரண்ட பெண்கள்! துப்பாக்கிச் சூடு நடத்திய தாலிபான்கள்!
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. பல்கலைக்கழகங்களில் மாணவிகள் மற்றும் மாணவர்கள் இடையே திரை அமைத்து மறைக்கப்பட்டுள்ளது. இருபாலருக்கும் தனி இருக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும் அந்நாட்டு உயர்கல்வி அமைச்சகம் என்று உத்தரவிட்டது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.