• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஆப்கானிஸ்தான் விவகாரம்: தவிர்த்த பாகிஸ்தான்,சீனா... டெல்லியில் விவாதிக்கப்பட்டது என்ன?

ஆப்கானிஸ்தான் விவகாரம்: தவிர்த்த பாகிஸ்தான்,சீனா... டெல்லியில் விவாதிக்கப்பட்டது என்ன?

ஆப்கானிஸ்தான் விவகாரம்

ஆப்கானிஸ்தான் விவகாரம்

அஜித் தோவல்தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான்தீவிரவாதிகளின் புகழிடமாக தீவிரவாதத்திற்கு பயிற்சி அளிக்கும், திட்டம் வகுக்கும், நிதியுதவி செய்யும் மண்ணாக மாறிவிடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.

  • Share this:
    ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பாக இந்தியா, ரஷ்யா , ஈரான் உள்ளிட்ட 8 நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். இதில், தீவிரவாதிகளின் புகழிடமாக ஆப்கானிஸ்தான் மாறிவிடக்கூடாது என உறுதிப்பட தெரிவிக்கப்பட்டது.

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து கடந்த ஆகாஸ்ட் மாதத்தில் தாலிபான் ஆட்சியை கைப்பற்றினர். தற்போது பொருளாதார நெருக்கடியில் ஆப்கானிஸ்தான் சிக்கியுள்ளது. இதேபோல், ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பாக விவாதிப்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் மறுப்பு தெரிவித்தன. இதனை தொடர்ந்து, ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெரனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

    குறிப்பாக, இந்தியாவும் மற்ற ஏழு நாடுகளும் ஆப்கானிஸ்தானின் மண் தீவிரவாதிகளின் புகழிடமாக தீவிரவாதத்திற்கு பயிற்சி அளிக்கும், திட்டம் வகுக்கும் மற்றும் நிதியுதவி செய்யும் மண்ணாக மாறிவிடக்கூடாது என வலியுறுத்தின. மேலும், போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில்  பாதுகாப்புச் சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள துயரங்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்ததோடு, குண்டுஸ், காந்தஹார் மற்றும் காபூல் ஆகிய இடங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தன.

    இதையும் படிங்க: யமுனையில் ரசாயன கழிவு: தெர்மாகோல் பாணியில் டெல்லி அரசு!


    ஆப்கானிஸ்தானில் இருந்து எழும் சவால்களை சமாளிக்க பிராந்திய நாடுகளிடையே நெருக்கமான ஆலோசனைகள், அதிக ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான நேரம் இது என்று அஜித் தோவல் கூறினார். “நாம் அனைவரும் அந்நாட்டின் வளர்ச்சிகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மட்டுமல்ல, அதன் அண்டை நாடுகளுக்கும் பிராந்தியத்திற்கும் முக்கியமான தாக்கங்களைக் கொண்டுள்ளன” என்றும் அவர் பேசினார்.

    மேலும் படிக்க: ஒரே ஒரு ட்விட்: ரூ.3.70 லட்சம் கோடியை இழந்த எலான் மஸ்க்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: