காபூல் மட்டுமே மிச்சம்: ஆப்கானின் அனைத்து முக்கிய நகரங்களையும் கைப்பற்றிய தலிபான்கள்!

தலிபான்

மொத்தமுள்ள 34 மாகாண தலைநகர்களில்  23 தலைநகர்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். எஞ்சியுள்ள ஒரு முக்கிய நகரம் காபூல் மட்டுமே.

 • Share this:
  ஆப்கானிஸ்தானின் அனைத்து முக்கிய நகரங்களையும் கைப்பற்றியுள்ள தலிபான் தீவிரவாதிகள் தற்போது காபூல் நகரை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்றனர்.

  அமெரிக்க படைகள் வெளியேற்றத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருக்கிறது. ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. தலிபான்களை சமாளிக்க முடியாமல் அரசு படைகள் திணறி வருகின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பல்வேறு முக்கிய நகரங்களையும் தலிபான்கள் கைப்பற்றி வருகின்றனர். ந்தூஸ், தலுகான், நிம்ருஸ், செபர்கான், சாரஞ், சமங்கன், புல்-இ-கும்ரி, தக்கார் உட்பட 10 மாகாணங்களின் தலைநகரங்களை  கைப்பற்றிய தலிபான் அமைப்பினர் அதனை தொடர்ந்து கந்தகாரை கைப்பற்றியது அரசுப் படைகளின் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

  இதையும் படிங்க: கால் தெரியும்படி செருப்பு அணியக்கூடாது': ஆப்கானில் பெண்கள் மீது மீண்டும் இறுகும் பிடி!


  இந்நிலையில், இன்று காலை ஜலாலாபாத் நகரையும் தலிபான்கள் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். எவ்வித தாக்குதலும் நடத்தாமலேயே ஜலாலாபாத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.  அந்நகரின் ஆளுநர் தலிபான்களிடம் சரண் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஜலாலாபாத்தை கைப்பற்றியதன் மூலம் பாகிஸ்தானுடன் இணைக்கும் சாலைகள் தற்போது தலிபான் வசம் வந்துள்ளது.

  மொத்தமுள்ள 34 மாகாண தலைநகர்களில்  23 தலைநகர்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். எஞ்சியுள்ள ஒரு முக்கிய நகரம் காபூல் மட்டுமே. அதனையும் கைப்பற்றிய தலிபான்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர்.

  மேலும் படிக்க: ஹைதியை புரட்டிப்போட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 304 பேர் பலி


  இதனிடையே பொதுமக்களிடம் நேற்று தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி , ஆப்கானிஸ்தான்  மிகவும் அபாயகரமானதாகவும், ஸ்திரத்தன்மை இல்லாமலும் உள்ளதாக குறிப்பிட்டார்.  தற்போதைய சூழ்நிலையில், ராணுவத்தையும், பாதுகாப்புப் படையினரையும் ஒருங்கிணைப்பதே முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
  Published by:Murugesh M
  First published: