• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரை குறிவைத்து தாக்கிய தாலிபான்கள்- தாக்குதலில் 6 பேர் பலி

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரை குறிவைத்து தாக்கிய தாலிபான்கள்- தாக்குதலில் 6 பேர் பலி

தாலிபான் தாக்குதல்

தாலிபான் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சரை குறிவைத்து நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.

  • Share this:
    ஆப்கானிஸ்தானில் ராணுவத்துக்கும், தாலிபன் பயங்கரவாத அமைப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அங்கு நிலைமை மோசமாகி வருகிறது. ஆப்கானிஸ்தானின் சரிபாதி பகுதிகள் தாலிபன்கள் வசம் உள்ள நிலையில், நாட்டை முழுவதுமாக கைப்பற்ற தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தான் ராணுவம், தாலிபன்களின் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகிறது.

    ஹேல்மாண்ட் மாகாணத்தை பிடிக்க தீவிரமாக போர் நடைபெற்று வரும் நிலையில், லஷ்கர் கா நகர சாலைகளில் நின்று தாலிபன்கள் போரிட்டு வருவதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிகிடக்கின்றனர்.

    அங்கு ஒரே நாளில் பொது மக்கள் 40 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு உதவியாக அமெரிக்க படை வான் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் முயற்சிக்கு, எங்கு முடியுமோ அங்கு நாங்கள் உதவி வருகிறோம். இது அமெரிக்க ராணுவத்தின் திட்டம் அல்ல. இது அவர்களின் நாடு. ஆப்கன் நாட்டு ராணுவம் போரிட வேண்டும். நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம். அதற்கான உரிமையும் வலிமையும் அமெரிக்காவுக்கு உள்ளது.

    இதனிடையே தலைநகர் காபூலில் பாதுகாப்பு நிறைந்த ஷெர்பூர் பகுதியில் பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா கான் முகமதுவின் வீட்டை குறித்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் வீட்டில் இல்லாத நிலையில், துப்பாக்கியுடன் அப்பகுதியில் நுழைந்த 3 பயங்கரவாதிகள் தாக்குதலை நடந்தனர். அவர்களை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த தாக்குதலில் 3 பொதுமக்களும், 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தாலிபன் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. தாலிபன்களை கண்டித்து ஆப்கானிஸ்தானின் பல இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தாலிபன்களுக்கு பாகிஸ்தான் உதவி வருவதாக குற்றம்சாட்டியுள்ள அந்நாட்டு துணை அதிபர் அம்ருல்லா சலே, பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினார்.



    இந்தியாவின் உதவியால் ஹிராத்தில் கட்டப்பட்ட அணையை தகர்க்கும் தாலிபன்களின் திட்டத்தை முறியடித்துள்ளதாக அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் ஃபவட் அமான் கூறியுள்ளார். இந்திய - ஆப்கானிஸ்தான் நட்பு அணை என அழைக்கப்படும் சல்மா அணையை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டதாகவும், அவர்களுக்கு எதிரான ராணுவத்தின் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அமான் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: