அரசாங்கத்தில் சேருங்கள்: பெண்களுக்கு தாலிபான்கள் அழைப்பு!

தாலிபான்

இஸ்லாமிக் எமிரேட்ஸ் பெண்களை  பலியாள் ஆக்க விரும்பவில்லை என்றும் ஷரியா சட்டத்தின்படி அவர்கள் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று தாலிபான் தெரிவித்துள்ளது.

 • Share this:
  ஆப்கானிஸ்தான் முழுவதும் பொதுமன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ள தாலிபான்கள் அரசாங்கத்தில்சேர பெண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

  தாலிபான்களின் ஆதிக்கத்துக்குள் ஆப்கானிஸ்தான் சென்றுவிட்ட நிலையில், அங்குள்ள பெண்களின் பாதுகாப்பு, உரிமை தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது. பெண்களை திருமணத்துக்கு தாலிபான்கள் கட்டாயப்படுத்துவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதேபோல், பெண்கள் முன்பு போல் கல்வி பயில முடியுமா, பணிக்கு செல்ல முடியுமா என்பதிலும் கேள்வி எழுந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அமெரிக்க படையெடுப்புக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சியே நடைபெற்று வந்தது.  அப்போது, கல்லெறிந்து கொல்லுதல், உடல் உறுப்புகளை துண்டித்தல், பொது இடங்களில் மரண தண்டனை வழங்குதல் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. ஆப்கானிஸ்தானில் உள்ள வயதானவர்களிடம் இது குறித்த அச்சம் இன்னும் நீங்கவில்லை.

  இதையும் படிங்க: தாலிபான்கள் கொன்றாலும் பரவாயில்லை: ஆப்கானை விட்டு வெளியேற மறுக்கும் இந்து அர்ச்சகர்!


  இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில்,  ஆப்கானிஸ்தான் முழுவதும் பொது மன்னிப்பு வழங்குவதாகவும் அரசாங்கத்தில் பெண்கள் சேர வேண்டும் என்றும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

  தாலிபான் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினரான எனமுல்லா சமங்கனி , இஸ்லாமிக் எமிரேட்ஸ் பெண்களை  பலியாள் ஆக்க விரும்பவில்லை என்றும் ஷரியா சட்டத்தின்படி அவர்கள் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ள இந்த தகவல், அந்நாட்டில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் விதமாக வெளியிடப்பட்டதாக கருத்தாக பார்க்கப்படுகிறது.

  மேலும் படிக்க: தாலிபான்.. பெண்களின் பாதுகாப்பு: உலக நாடுகளுக்கு மலாலா வேண்டுகோள்

  காபூல் நகரை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், பெரிய அளவில் வன்முறையோ, தாக்குதல் சம்பவங்களோ அங்கு பதிவாகவில்லை. பெரும்பாலான மக்கள் அச்சத்துடன் தங்களின் வீடுகளிலேயே அடைந்துள்ளனர்.
  Published by:Murugesh M
  First published: