ஹோம் /நியூஸ் /உலகம் /

வான்வழிப் போக்குவரத்தை நிறுத்திய தாலிபான்கள்: தரைவழியாக அண்டை நாடுகளுக்கு படையெடுக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்

வான்வழிப் போக்குவரத்தை நிறுத்திய தாலிபான்கள்: தரைவழியாக அண்டை நாடுகளுக்கு படையெடுக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஆப்கானிஸ்தான் மக்கள் சாலை வழியாக அண்டை நாடுகளுக்கு செல்ல முயற்சி செய்துவருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் பின்வாங்கியதால் அந்நாட்டை தாலிபான்கள் கைப்பற்றி தங்களுடைய ஆட்சியை அமைத்துள்ளனர். ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு, காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது, தாலிபான்களின் ஆட்சிக்கு எண்ணற்ற ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து அமெரிக்க ராணுவ விமானம் மூலம் வெளியே சென்றனர்.

  ஆயிரக்கணக்கானோர் விமானத்தில் ஏறி வாய்ப்பில்லாமல் அங்கேயே காத்துக்கிடந்த காட்சிகளையும் பார்க்க முடிந்தது. இந்தநிலையில், நேற்று அமெரிக்க ராணுவம் முழுவதுமாக ஆப்கானிஸ்தானிலிருந்து சென்றது. தற்போது காபூல் விமான நிலையமும் தாலிபான்கள் கட்டுக்குள் வந்துள்ளது. அதனையடுத்து, அந்நாட்டில் வான்வழி போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால், வெளிநாடு மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என மக்கள் பலரும் தரை மார்க்கமாக எல்லையில் குவிந்து வருகின்றனர்.

  சுமார் 6.52 லட்சம் சதுர கிலோ மீட்டர் நில பரப்பளவில் அமைந்துள்ள நாடு ஆப்கானிஸ்தான். பாகிஸ்தான், சீனா, ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உட்பட மொத்தம் ஆறு சர்வதேச நாடுகளின் எல்லையை ஆப்கானிஸ்தான் கொண்டுள்ளது. ஆக்கிரமிப்பு பகுதிகளாக கருதப்படும் காஷ்மீரின் சில பகுதிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டான் இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் 106 கிமீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. தற்போது இந்த நாடுகளின் எல்லைகளில் தான் சாரை சாரையாக மக்கள் வரிசையில் காத்து நிற்பதாக தகவல் வந்துள்ளது.

  அமெரிக்கா ஆகஸ்ட் 30 வரையில் சுமார் 80,000 மக்களை ஆப்கன் - காபூல் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றியுள்ளது. அதில் 5,500 பேர் மட்டுமே அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கமுள்ளவர்கள் அனைவரும் ஆப்கன் நாட்டை சார்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் ஆட்சியில் நிம்மதியாக வாழ முடியாது என்ற காரணத்தால் ஆப்கன் மக்கள் அகதிகளாக பிற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எல்லைப் பகுதி முழுவதும் தலிபான் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள தலிபான் படையைச் சேர்ந்த பாதுகாவலர்கள் வணிகர்களையும், நாட்டை விட்டு வெளியேற முறையான ஆவணங்களை கொண்டிருப்பவர்களை மட்டுமே பயணத்தைத் தொடர அனுமதிக்கின்றதாக கூறப்படுகிறது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Afghanistan, Taliban