ஹோம் /நியூஸ் /உலகம் /

“பொறுத்தது போதும் பொங்கி எழு...” ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கு ஆதரவாக திரண்ட ஆண்கள்..

“பொறுத்தது போதும் பொங்கி எழு...” ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கு ஆதரவாக திரண்ட ஆண்கள்..

பெண் கல்விக்கு ஆதரவாக திரண்ட ஆண்கள்

பெண் கல்விக்கு ஆதரவாக திரண்ட ஆண்கள்

Afghanistan Taliban : ஆப்கானிஸ்தான் மாணவிகளின் கல்வி உரிமைக்காக மாணவர்களும் போராட்டக்களத்தில் குதித்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, Indiaafghanistanafghanistan

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து, அங்கு படிப்படியாக பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்கத் தடை விதிக்கப்பட்டது. பெண்கள் பயிலும் கல்லூரிகளை மூடவும் உத்தரவிடப்பட்டது. இதனால் வெகுண்டெழுந்த பெண்கள், தலைநகர் காபூல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பெண்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், மாணவர்களும் தங்களுடைய வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். பெண்கள் மீண்டும் கல்லூரிகளில் அனுமதிக்கப்படும் வரை தாங்கள் வகுப்புகளுக்குள் செல்ல மாட்டோம் என மாணவர்கள் கூறியுள்ளனர்.

மாணவர்களின் இந்தப் போராட்டத்தால் ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களை மூடும் நிலை உருவாகியுள்ளது. இதனால் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உயர்நிலைக் குழுக்களை ஆப்கன் அரசு அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.


First published:

Tags: Afghanistan, Taliban